Published : 02 Nov 2013 11:14 AM Last Updated : 02 Nov 2013 11:14 AM
சேலம் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: கொளத்தூர் மணி கைது
சேலம் வணிகவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசித் தாக்கிய சம்பவம் தொடர்பாக, திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நால்வரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், திராவிடக் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நள்ளிரவு 2.15 மணிக்கு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சேலம் காந்தி சாலையில் உள்ள மத்திய அரசின் வருமானவரித்துறை ஆணையர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது சிக்கிய துண்டு பிரசுரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன்சிங்கே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே...
சட்டமன்ற தீர்மானத்தை இழிவுப்படுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு. மத்திய அரசே... தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து, இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT