Published : 15 Aug 2016 08:51 AM
Last Updated : 15 Aug 2016 08:51 AM

ரயிலில் பணம் கொள்ளை விவகாரம்: 250 பேரிடம் விசாரணை; ஆதாரம் திரட்டும் பணி தீவிரம் - ஆர்பிஎஃப் சார்பில் 5 தனிப்படைகள் அமைப்பு

சேலம் விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் பணம் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக இதுவரையில் சுமார் 250 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆதாரங்களை திரட்டும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) சார்பில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் இருந்து சென் னைக்கு ரயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வந்த ரூ.5.75 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வேத் துறையை சேர்ந்த அலுவலர்கள், வங்கித்துறை அலுவலர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை கடந்து சென்னை எழும்பூருக்கு சென்றபோதும், அந்த சரக்கு பெட்டியில் எந்த ஓட்டையும் இல்லை எனவும், அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததாகவும் தகவல் வெளியானது. ரயில்வே பாது காப்பு படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த போது பதிவாகி இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக தெரிய வில்லை என உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை திரட்ட விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

இந்த வழக்கு தொடர்பாக பல் வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டாலும், குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணிகளில் நாங் களும் இணைந்து பணியாற்றி வருகிறோம். ரயிலில் வங்கி பணம் கொண்டு செல்ல முன்பதிவு செய்த நேரம், பணம் ஏற்றியது, ரயில் நிலையங்களில் கடந்து வந்தது போன்ற பல்வேறு கோணங்களில் இந்த வழக்கில் சந்தேகிக்கும் நபர் கள் என இதுவரையில் சுமார் 250 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளோம். ஒவ்வொரு வரிடமும் தலா 30 நிமிடங்கள் தனித்தனியாக விசாரணை நடத் தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தகவல் களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய ஆதாரங் களை திரட்டும் வகையில் விசார ணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.

சேலத்தில் இருந்து வந்த விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, சம்பந்தப்பட்ட சரக்குபெட்டியின் மேற்கூரையில் ஓட்டை எதுவும் இல்லை என தகவல் வெளியானது. ஆனால், அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது காட்சிகள் எதுவும் தெளிவாக இல்லை. அதிகாலை நேரம் என்பதால் இந்த சிக்கல் இருந்தது. இதற்கிடையே, இனி பொருத்த உள்ள சிசிடிவி கேமராக்கள் நடைமேடைகளில் வந்து நிற்கும் விரைவு ரயில்களின் மேற்கூரைகளும் தெளிவாக பதிவாகும் வகையில் செய்யும்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இந்த வழக்கில் மொத்தம் 340 கி.மீ. தூரம் கொண்ட ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்யவுள்ளதால், விசார ணையை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அங்கு சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற் போது 5 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப் படையிலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள். விருத்தாசலம், ஈரோடு, சேலம், சென்னை ஆகிய இடங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கிடைக்கும் ஆதாரங்களை சிபிசிஐடி போலீ ஸாருக்கு உடனுக்குடன் அளித்து வருகிறோம் என்றனர்.

விசாரணை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையிலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள். விருத்தாசலம், ஈரோடு, சேலம், சென்னை ஆகிய இடங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x