Published : 29 Apr 2017 09:00 AM
Last Updated : 29 Apr 2017 09:00 AM
கொடைக்கானல் நகரில் தண்ணீர் பிரச்சினையால் சுற்றுலாப் பயணி கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுதிகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து என ஆண்டுக்கு 65 லட்சம் பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். இதில் 70 ஆயிரம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள். ஆண்டுதோறும் இந்த எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக் கான அடிப்படை வசதிகளில் கொடைக்கானல் மிகவும் பின்தங்கி வருகிறது. கொடைக்கானல் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் அளவுக்கு நீராதாரம் இங்கு இல்லை. இருக்கும் ஒரே நீராதாரமான மனோரத்தினம் நீர்த்தேக்கமும் சில வாரங்களுக்கு முன்பு வறண்டுவிட்டது.
இதனால் ஜிம்கானா மைதானத் தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலமே உள்ளூர் மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், விடுதிகளுக்கு என ஜிம்கானா மைதானத்தில் உள்ள 2 ஆழ்துளைக் கிணறு கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற் போதைக்கு கொடைக்கானலின் நீராதாரமாக விளங்கும் ஆழ் துளைக் கிணறுகளில் போதிய நீர் கிடைக்காததால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கும்விதமாக சிலர் அனுமதி யின்றி ஏரியில் உள்ள தண்ணீரை இரவு நேரத்தில் லாரிகள் மூலம் எடுத்து வந்தனர். தண்ணீர் திருடி யதாகக் கூறி சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட லாரி களை பறிமுதல் செய்தது. விடுதி களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகள் பிடிபட்டதால் அனுமதிக்கப்பட்ட இடத்தில்கூட தண்ணீர் எடுக்க லாரிகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இது மேலும் சிக்கலை உருவாக்கியது.
விடுதிக் கட்டணம் உயர்வு
தண்ணீர் பிரச்சினையால் விடுதிகள் கட்டணமும் நாள் ஒன்றுக்கு ரூ.1500 என்று இருந்த நிலையில் இரு மடங்காக உயர்ந் துள்ளது. இருந்தபோதும் வெகு தொலைவில் இருந்து வந்த சுற் றுலாப் பயணிகள் அதிக தொகை கொடுத்து தங்கினாலும் இவர் களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க முடியாத நிலையில் விடுதி உரிமையாளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்க செயலா ளர் எஸ்.அப்துல்கனிராஜா கூறிய தாவது: கொடைக்கானலில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. 2013-ம் ஆண்டு இதேபோல் வறட்சி நிலவியபோது அரசு அதிகாரிகள் அனுமதியுடன் சங்க செலவில் ஜிம்கானா மைதானத்தில் 7 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விடுதிகளுக்கு தண்ணீர் எடுத்துவந்தோம். இதில் தற்போது 2 ஆழ்துளைக் கிணற்றில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் ஒரு லோடு லாரி தண்ணீர் எடுக்க 2 மணி நேரம் ஆகிறது. இதனால் கொடைக்கானல் விடுதி களில் தங்கும் சுற்றுலாப் பயணி களுக்குத் தண்ணீர் வசதி செய்துதர முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இந்த ஆண்டு சீஸன் தொடங்கிய நிலையில் விடுதிகளுக்கு தேவையான தண் ணீர் கிடைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துக்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம். ஆனால் விடுதிகளுக்கான தண்ணீர் பிரச்சி னையைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில், ஜிம்கானா மைதானத்தில் தண்ணீர் பிடித்த லாரிகளை ஏரியில் இருந்து தண்ணீர் திருடியதாகக் கூறி போலீ ஸார் உதவியுடன், நகராட்சி நிர் வாகத்தினர் பிடித்து வைத்துள்ள னர். இதனால் இருக்கும் நீரையும் விடுதிகளுக்கு எடுத்துச்செல்ல லாரிகள் இல்லை. தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளையும் வெளியேறச் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். இதனால் விடுதி உரிமையாளர்கள் மட்டு மல்ல, சுற்றுலாப் பயணிகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு வாரத்துக்குள் போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வா கம் தண்ணீர் பிரச்சினைக்கு நட வடிக்கை எடுக்காவிட்டால் விடுதி களை மூடுவதைத் தவிர எங்க ளுக்கு வேறு வழியில்லை என்றார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி கூறியதாவது: கொடைக் கானலில் தண்ணீர் பிரச்சினையால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியிருப்பது உண்மைதான். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் தெரி வித்து, நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT