Published : 07 Mar 2016 03:19 PM
Last Updated : 07 Mar 2016 03:19 PM

கூட்டணி பற்றி யாரிடமும் பேச வேண்டாம்: தொண்டர்களுக்கு தேமுதிக மேலிடம் உத்தரவு

கூட்டணி பற்றிய விருப்பங்கள், எண்ணங்களை யாரிடமும் பேச வேண்டாம் என தேமுதிக நிர்வாகிகள், தொ ண்டர்களுக்கு அக்கட்சி மேலிடம் வாய்மொழியாக உத்தர விட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அல்லது தனித்து களமிறங்குமா என்பது தெரியவில்லை. கூட்டணி முடிவை விஜயகாந்த் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கி டையில், ஒருபுறம் திமு கவுடன் கூட்டணியை முடிவு செய்துவிட்டதாகவும், மறுபுறம் பாஜகவுடன் சென்றுவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த தகவல்கள் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதனால், நேற்று முன்தினம் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வதந்திகளை நம்ப வேண்டாம், கூட்டணி குறித்து தேமுதிக யாருடனும் இதுவரை பேச வில்லை என்றார். இவர் இப்படி ஒரு அறிக்கை வெளியி ட்டபோதே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவர் மக்கள் நலக்கூட்டணிக்குத்தான் வருவார் என்றார். அதனால், கூட்டணி சம்பந்தமான திரைமறைவு பேச்சுவார்த்தை தேமுதிகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கூட்டணி சம்பந்தமாக எந்த கருத்துகளை யும் யாரிடமும் பேச வேண்டாம் என தேமுதிக மேலிடம் மாவட்டச் செயலாளர்கள் மூலம் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த காலத்தில் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறிய பாமக, ஒவ்வொரு தேர்தலிலும் எந்த கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடைசியில் அதுவே அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்ப டுத்தியது.

அதுபோன்ற நிலைமை தேமுதி கவுக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக கட்சி மேலிடம் கூட்டணி பற்றிய விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை மாற்று கட்சியினர், பொதுமக்களிடம் விவாதிக்க வேண்டாம் என்றும், மாற்றுக்கட்சியினரே வந்து பேசினால் கூட அவர்களிடம் கேப்டன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என சொல்லி விடுங்கள் எனக் கூறியுள்ளனர்.

சில நாட்களாக திமுகவுடன் கூட்டணி முடிவாகிவிட்டதாக வதந்தி பரவியதால், தேமுதிக தொண்டர்கள் அதை நம்பி கட்சி மேலிடம் சொல்லாமலேயே உள்ளூர் திமுகவினருடன் நெருக் கமாகினர். இதை வைத்து தேமுதிக தொண்டர்களுக்கு திமுகவுடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் என மாற்றுக்கட்சியினர் வதந் திகளை பரப்பி லாபம் அடைய பார்க்கின்றனர். அதற்கு நிர் வாகிகள், தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x