Published : 29 Jan 2017 09:46 AM
Last Updated : 29 Jan 2017 09:46 AM

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்குகிறது: 50 சதவீதம் ஊதிய உயர்வு கேட்க தொழிற்சங்கங்கள் முடிவு

அரசு போக்குவரத்து ஊழியர்களுக் கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை அடுத்த வாரம் தொடங் கவுள்ளது. 50 சதவீத ஊதிய உயர்வு உட்பட 28 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டு களுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந் தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. எனவே, 13-வது புதிய ஒப்பந்தத் துக்கான பேச்சுவார்த்தையை தொடங்க கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, தொழிற்சங்கங் களுடன் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த கடந்த 13-ம் தேதி குழு அமைக்கப்பட்டது. இதில், அரசு நிதித்துறை துணை செயலர் வெங்கடேசன் மற்றும் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன் மற்றும் விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் உட்பட மொத்தம் 15 பேர் இடம்பெற் றுள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த வார இறுதியில் ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் படவுள்ளது.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “13-வது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இருக்கும் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உட்பட 28 அம்ச கோரிக்கைகளை முன்வைப்போம்” என்றார்.

ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும் போது, “தொழிற்சங்கங்கள் சார்பில் 28 கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு நிர்வாகத்திடம் அளித்துள் ளோம். குறிப்பாக 50 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும், சேவை அடிப் படையில் அரசு போக்குவரத்து துறை செயல்படுவதால் நஷ் டத்தை தமிழக அரசே ஏற்று, போதிய நிதி ஒதுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை யில் பேசப்படும்’’ என்றார்.

அரசு போக்குவரத்து அதிகாரி கள் தரப்பில் கூறும்போது, “13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை அடுத்த ஒரு வாரத் தில் தொடங்கும். இதற்கான தேதியை முடிவு செய்து தொழிற் சங்கங்களுக்கு தகவல் தெரிவிக் கப்படும். பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் போக்குவரத்து கழகங் களின் நிதி நிலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x