Published : 07 May 2017 09:54 AM
Last Updated : 07 May 2017 09:54 AM
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச் சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டிய லில் சென்னைக்கு 235-வது இடம் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2016 முதல் தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தல், வகை பிரித்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாமை உள் ளிட்ட அம்சங்களின்படி மதிப்பெண் கள் வழங்கப்பட்டு, தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப் படுகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் உள்ள 73 நக ரங்களில், மைசூரு முதலிடத்தை யும், சென்னை 36-வது இடத்தை யும் பிடித்திருந்தன. இந்த ஆண்டுக் கான பட்டியலில் மொத்தம் உள்ள 434 நகரங்களில், இந்தூர் முதல் இடத்தில் உள்ளது. சென்னை மாநகரம் 235-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சென்னை மாநகர மக்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் இவ்வளவு பின்தங்கியிருப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி செங் கொடி தொழிலாளர் சங்க பொதுச் செயலர் பி.நிவாசலு கூறும் போது, “சென்னையில் தூய்மை மீதான அலட்சியம் அன்றும், இன் றும் அப்படியேதான் இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிக தொகை செலவிடப்படும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்ட மைப்பை ஏற்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். தூய்மை, துப்புரவில் கவனம் செலுத்துவதில்லை. போதிய நிதி யும் ஒதுக்குவதில்லை. போதிய ஆட்களையும் நியமிப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. பல துப்புரவு தொழிலாளர்கள் அதிகாரிகளின் வீடுகளுக்கும், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தான் பணி செய்ய அனுப்பப்படு கின்றனர். கடந்த ஆண்டு 36-வது இடத்தில் இருந்தபோதே, உரிய கவனம் செலுத்தியிருந்தால், சென்னை முதல் 10 இடத்தில் வந்திருக்கும். இதே நிலை தொடர்ந் தால், பட்டியலில் சென்னைக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்” என்றார்.
பிளாஸ்டிக் பயன்பாடு
தேசிய பசுமை தீர்ப்பாய வழக் கறிஞர் கவுசிக் நரேன் சர்மா, “அம்மா உணவக கழிவிலிருந்து மாநகராட்சி நிர்வாகம், காஸ், இயற்கை உரம் தயாரிக்கிறது. அதைப்போல, மற்ற பெரிய உணவ கங்களில் உருவாகும் கழிவு களுக்கு பொதுவான குப்பை மேலாண்மை கட்டமைப்பை ஏற் படுத்த வேண்டும் என்ற கடுமை யான உத்தரவு இதுவரை பிறப் பிக்கப்படவில்லை.
தனியார் உணவகங்களில்தான் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. அப்படி பயன் படுத்தினால், அந்த நிறுவனத்துக்கு வர்த்தக உரிமம் வழங்கப்படாது என மாநகராட்சியால் கடுமை காட்ட முடியவில்லை. அதனால்தான் சென்னை மாநகராட்சி 235-வது இடத்தில் உள்ளது. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, எந்த நோயும் பரவவில்லை. இதை சாதித்த மாநகராட்சி நிர்வாகம், தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னையை முதலிடத்துக்கு கொண்டுவரவும் முடியும்” என்றார்.
சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர் சங்கத் தலைவர் பி.புருஷோத்தமன் கூறும் போது, “மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் ஆய் வுக் கூட்டங்களில் கீழ்நிலை அதி காரிகளை பேசவிடுவதில்லை. கருத்தும் கேட்பதில்லை. இதனால் தான் சென்னை பின்தங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போதுதான் பெயரளவுக்கு குப்பையை வகை பிரித்து, இயற்கை உரமாக மாற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதை மாநகரம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தினாலே, சென்னை தூய்மை நகரமாக மாறும்” என்றார்.
உண்மையில்லை
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த கணக்கெடுப்பில் தேர்வு விடுப்பில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர். ஒரு நகரத்தை 2 பேர் மதிப்பிடுகின்றனர். அவர்களுக்கு தூய்மை தொடர்பாக எந்த அள வுக்கு அறிவு முதிர்ச்சி இருக்கும் என்று தெரியவில்லை. அவர்களின் தவறான மதிப்பீட்டால்தான் சென்னைக்கு 235-வது இடம் கிடைத்துள்ளது.
தற்போது மாநகரம் முழுவதும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடங்கி யிருக்கிறோம். கடந்த ஆண்டு 36-வது இடத்தில் இருந்த நிலையில், சரியாக மதிப்பிட்டிருந்தால் சென்னை மேலும் முன்னேறி இருக்க வேண்டும். இந்த பட்டி யலில் உண்மை இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT