Published : 10 Aug 2016 08:30 AM
Last Updated : 10 Aug 2016 08:30 AM
ஜி.எஸ்.டி மசோதாவை நிறை வேற்றியதால் ஒருமுனை வரிக்கு உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரி வித்தாலும் தமிழ்நாட்டில் அத்தி யாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி உயரும் என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டி மசோதாவால் ஊழல், கருப்புப் பணம் புழக்கம் குறைவ துடன், சிறுதொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், உற்பத்தி சார்ந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி மசோதா வால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வர்த்தகர்களின் கருத்து.
எஸ்.பையாஸ் அஹ்மது (கவு ரவச் செயலாளர், ஆம்பூர் டேனரி சங்கம்):
வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு தோல் தொடர்பான ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. தோல் தயாரிப்புப் பணிக்காக நாங்கள் வாங்கும் ரசாயனங்கள் மற்றும் காலணி தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்க ளுக்கு தனித்தனியாக ‘வாட்’ வரி மற்றும் மாநிலங்களின் வரியை செலுத்துகிறோம். ஜி.எஸ்.டியால் நாங்கள் வாங்கும் மூலப் பொருட் களுக்கு ஒரே வரியை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வாட் வரி விதிப்பைக் காட்டிலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மிகவும் சுலபமானது. அதனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
இரா.ப.ஞானவேலு (மாவட்டச் செயலாளர், வணிகர் சங்க பேர மைப்பு):
ஜிஎஸ்டி-யால் நாட்டுக்கு நன்மை என்றாலும், மாநில அரசின் உரிமையை பறிப்பதாக இருக்கிற து. சிமென்ட் மீதான வரி 27 சதவீ தத் தில் இருந்து 18 சதவீதமாகும் என்பதை வரவேற்கலாம். தமிழ்நாட் டில் பத்திரப் பதிவுக் கட்டணம் 7 சதவீதமாக உள்ளது. ஜிஎஸ்டியால் 15 முதல் 16 சதவீதமாக உயரும். இது ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக பாதிக்கும்.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, பால், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரிசிக்கு வரி இல்லை. ஆனால், ஆந்திராவில் 4 சதவீதம் வரி விதிக் கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 18 சதவீதம் வரி மக்கள் மீதுதான் திணிக்கப்படும். உணவுப் பொ ருட்களின் விலை அதிகரிக்கும். தமிழக அரசைப் பின்பற்றி மத்திய அரசும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது வரி விலக்கு அளிக்க வேண்டும்.
எம்.வெங்கடசுப்பு (தலைவர், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம்):
இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும்தான் ஹோட்டல்களில் 2 சதவீதம் வாட் வரி வதிக்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களில் அதிகம். ஜிஎஸ்டி அமல்படுத்தினால் 16 சதவீதமாக வரி உயரும் என்பதால் ஹோட்டல் தொழில் முற்றிலும் பாதிக்கப்ப டும். கூடுதல் வரியை சமாளிக்க பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுகுறித்து, மத்திய அரசுடன் மாநில அரசு பேச வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT