Published : 04 Sep 2016 10:14 AM
Last Updated : 04 Sep 2016 10:14 AM

எச்ஐவி பாதித்தவர்களுக்கு உதவித்தொகை திட்டம் வருமா? - அறிவிப்புக்காக ஏங்கும் 2.50 லட்சம் பேர்

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை கிடைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா என எச்ஐவி பாதித்தோர் கூட்டமைப் பினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 2.50 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் கிராமங்களிலும், 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். சேலம், மதுரை, தேனி, திருச்சி, சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் எச்ஐவி பாதித்தோர் அதிகமாக உள்ளனர்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டோ ருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காசநோய் ஏற்பட்டு அவர் களால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. நோய் பாதிக்கப்பட் டவர்கள் பலர் சரியான சிகிச்சை, ஊட்டச்சத்து கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். அதனால், எச்ஐவி பாதித்தோருக்கு மாதம்தோறும் நிரந்தரமாக உதவித்தொகை கிடைக் கவும், அவர்களுடைய குழந்தை கள் மேற்படிப்பு படிக்கவும் அரசு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

8,000 குழந்தைகள்

இதுகுறித்து தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு நிறுவனர் கருணாநிதி கூறியதாவது: தமிழகத் தில் 8 ஆயிரம் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர். எச்ஐவி பாதித்த பெற்றோருக்கு 3 லட்சம் குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் இறந்த நிலையில், இவர்களில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகள், தாத்தா, பாட்டி உடன் அல்லது ஆதரவற்ற இல்லங்களில் வாழ்கின்றனர். எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்கள், குழந்தைகளுக்கு உழவர் பாது காப்பு திட்டத்தில் 1,000 ரூபாய் உதவித்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், கிராமப் புறங்களில் எச்ஐவி பாதிக்கப்பட்ட 20 சதவீதம் பேர் மட்டுமே இந்த உதவித்தொகையை பெறுகின்ற னர். நகர்ப்புறங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லாததால், 50 சதவீதம் பேருக்கு இந்த உதவித் தொகை கிடைப்பதில்லை.

எச்ஐவி, காசநோய், புற்று நோயாளிகளுக்கு இந்த உதவித் தொகையை வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்தும், கிராமங் களில் உதவித்தொகை பெறுவதில் விஏஓ மூலம் பிரச்சினை ஏற்படுகிறது. விஏஓ-க்கள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாய நிலம் இருக்கிறதா, விவசாய கூலித் தொழிலாளியா என கேட்டு உதவித்தொகையை நிராகரிக்கின்றனர். பணம் கொடுப் பவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை கிடைக்கிறது.

எச்ஐவி-வை கட்டுப்படுத்துவதற் கான 3 வகையான கூட்டு மருந் தான ஏஆர்டி மருந்து 2004-ம் ஆண்டு முதல் வந்தது. அதற்கு முன், எச்ஐவியால் பாதிக்கப் பட்ட ஏராளமானோர் உயிரிழந்து விட்டனர். ஏஆர்டி மருந்து மட்டும் உயிரைக் காப்பாற்றுவது இல்லை. எச்ஐவி பாதித்தவர்களுக்கு ஊட்டச் சத்தும் மிக முக்கியம். ஊட்டச்சத்து கிடைக்காமலும் பலர் இறக்க நேரிடுகிறது. நகர்ப்புறத்தில் வாழும் 50 சதவீதம் நோயாளிகளில் 20 சதவீதம் பேர் விதவைகளாக இருக்கின்றனர். அவர்களால் நன்றாக சாப்பிட முடியாமலும், வீட்டு வாடகை கொடுக்க முடியா லும், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, எச்ஐவி பாதித்தவர் களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது புதிய உதவித்தொகை திட்டத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும்.

எச்ஐவியால் பாதிக்கப்பட் டோரின் குழந்தைகள் 3 லட்சம் பேருக்கு மேற்படிப்புக்கு உதவி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படிப்புக்கு வங்கிகள் 60 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகின்றன. மீதி 40 சதவீதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், எச்ஐவி பாதித்தவர் குழந்தைகளின் உயர் கல்விக் கனவு கலைந்து குழந்தைத் தொழிலாளர்களாகும் அவலம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x