Published : 27 Mar 2014 09:58 AM
Last Updated : 27 Mar 2014 09:58 AM

கடிதப் புயல் கலைஞர் என்றால் கடித சூறாவளி ஜெயலலிதா: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு

கடிதப் புயல் கலைஞர் என்றால் கடித சூறாவளி ஜெயலலிதா தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் புதன்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் சேர்ந்த உமாசங்கரை ஆதரித்து விழுப் புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நமது ஒரே குறிக்கோள் அதிமுக, திமுக வெற்றிபெறக்கூடாது என்பது தான். இம் மாவட்டத்தில் கரும்பு அதிகம். கரும்பு இனிக்கிறது. ஆனால் விவசாயியின் வாழ்க்கை கசக்கிறது. இம்மாவட்டத்தில் பொன்முடியும், சி.வி.சண்முகமும் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் இம்மாவட்டம் வளர்ச்சி பெறவில்லை. அவர்கள் வளர்ச்சி பெற்று விட்டார்கள்.

நகைத் தொழிலாளர்கள்

30 ஆயிரம் நகைத் தொழிலா ளர்கள் இம்மாவட்டத்தில் உள்ள னர். தமிழகத்தில் அதிக நகைத் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்திலும், அடுத்து விழுப்பு ரத்திலும் உள்ளனர். சிதம்பரம் அவரது தொகுதிக்கு மட்டும் ஸ்டார் ஸ்வர்ணா திட்டத்தை அமல்படுத்தினார். நான் அரசியலுக்குப் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்துள் ளேன். இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்வோம் என்பதே தேமுதிகவின் கொள்கை. நான் முடிந்தால் உதவுவேன். யாருக்கும் கஷ்டம் கொடுக்கமாட்டேன்.தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கவே முடியவில்லை. மின்சாரமே இல்லை என்கிறார்கள். 2012-ல் நத்தம் விஸ்வநாதன் வானத்தில்தான் மின்வெட்டு இருக்கும் என்றார்.

அதிமுக-வுக்கு மக்கள் எதிர்ப்பு

அதனால்தான் அதிமுக வேட்பாளர்களை ஆங்காங்கு பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ண யிக்கும் ஜெயலலிதா பெட்ரோல் டீசல் விலையை இதற்கு மேல் ஏற்றவிடமாட்டேன் என இலக்கு நிர்ணயிக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தொழில், விவசாயம், கல்வி வளர்ச்சி இல்லாமல் மிகவும் பின் தங்கியுள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.தற்போது எல்லா இடத்திலும் வாகன சோதனை நடக்கிறது.

வானத்தில் ஹெலிகாப்டரில் செல்லும் ஜெயலலிதாவை எப்படி சோதனை நடத்துவது. கடிதப் புயல் கலைஞர் என்றால் ஜெயலலிதா கடித சூறாவளி என்று வைத்துக்கொள்ளலம். எதற்கு எடுத்தாலும் கடிதம் எழுதுவது. ஏன் ஒருமுறை நேரில் சென்று பிரதமரை சந்திக்கலாமே? நானாவது பிரதமரைச் சந்தித்தேன்.

தமிழ்மக்களை வாழவைக்கவே இக்கூட்டணி. 2004 ல் அதிமுகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்தது போல இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும் என்று விஜய்காந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x