Published : 10 Apr 2014 10:51 AM
Last Updated : 10 Apr 2014 10:51 AM
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பட்டாசுத் தொழிற்சாலை பிரச்சினை விருதுநகர் தொகுதியில் எதிரொலிக்கும் என்பதால், காங்கிரஸ் தன் பலத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு சாதகமாக்கிக்கொள்ள களமிறங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை களில் ஒரு லட்சத்துக்கும் அதிமா னோர் நேரடியாகவும், சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெற்று வருகின்றனர்.
தீபாவளி, தசரா போன்ற பண்டி கைகளுக்கு மட்டுமே பயன்படுத் தப்பட்ட பட்டாசுகள் தற்போது கோயில் திருவிழாக்கள், திரு மணங்கள் உள்பட அனைத்து விசேஷங்களிலும் பயன்படுத் தப்பட்டு வருவதால், சீசன் தொழிலாக இருந்த பட்டாசு உற்பத்தி தற்போது ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பட்டாசு தொழிற் சாலைகள் மற்றும் வெடிபொருள் களை இருப்பு வைக்கும் கிடங்குகளுக்கான உரிமத் தொகையை மத்திய அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது, பட்டாசு இருப்பு வைக்கும் கிட்டங்கிக்கு இருப்பு அறைகளில் 2 லட்சம் கிலோ அளவு கொண்ட பட்டாசு களை இருப்பு வைத்திட ரூ. 15 ஆயிரமாக இருந்த ஆண்டுக் கட்டணம், இப்போது 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டாசு ஆலைக் கான உரிமம் தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ. 65 ஆயிரமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இது பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நடவடிக்கை யைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் அனைத்து பட் டாசுத் தொழிற்சாலைகளும் கால வரையின்றி அடைக்கப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
இப்பிரச்சினை காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவருகிறது. இதன் காரணமாக விருதுநகர் தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி-யுமான பி.மாணிக்கம் தாகூருக்கு பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியிலிருந்த ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி யில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 554 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 83 வாக்காளர்களும் உள்ளனர். இந்த இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 4 லட்சத்து 21 ஆயிரத்து 637 வாக்காளர்களில், பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 3.50 லட்சம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியின்மேல் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக திருப்பும் முயற்சியில் கம்யூனிஸ்ட்கள் களமிறங்கி உள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் சாமுவேல்ராஜ். இதுவரை மக்களுக்காக செய்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், விபத்தில் உயிரிழந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தந்த நஷ்டஈடுகள் குறித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் இத்தொழிலுக்கான உரிமக் கட்டணத்தை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளதை சுட்டிக்காட்டி காரசாரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT