Published : 12 Nov 2013 01:08 PM
Last Updated : 12 Nov 2013 01:08 PM
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மேலும் பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 8 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் நலனுக் காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு, செயல் பட்டு வருகின்றன.
இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட தொலை நோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்ய தொழில் திறன் பெற்றவர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் விருப் பத்தினை நிறைவு செய் யும் வகையிலும், தமிழ் நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவை யினை ஈடு செய்யவும், பல்வேறு காரணங்களினால் உயர்கல்வியினைத் தொடர இயலாத மாணவ, மாணவிகள், தொழிற் பயிற்சி பெற்று அதன் மூலம் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள துணைச் செய்யவும் இத்தகைய தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் நடப்பாண்டில் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு ; தேனி மாவட்டம் - போடி; விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை; திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம்; தூத்துக்குடி மாவட்டம் - வேப்பலோடை ஆகிய இடங்களில் 5 புதிய
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ; திருவண்ணாமலை மாவட்டம் - ஜமுனாமரத்தூர் ; கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைக்கட்டி ; நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ; நீலகிரி மாவட்டம் - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள்; என மொத்தம் 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT