Published : 11 Jul 2016 12:50 PM
Last Updated : 11 Jul 2016 12:50 PM
விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டை உயர்த்தக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகளை மக்கள் நீதி மன்றங்களில் விசாரணைக்கு வர விடாமல் காப்பீட்டு நிறுவனங்கள் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில் தாமதம் ஏற்படுவதால், பாதிக்கப்பட்டோர் தவிக்கின்றனர்.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்கவும், வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் நோக்கத்திலும் மாதந்தோறும் இரண்டாவது சனிக் கிழமை மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 1986 முதல் இது வரை 77,357 முறை மக்கள் நீதிமன் றங்கள் கூடியுள்ளன. இவற்றில் 73,57,964 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ரூ.11,354 கோடியே 64 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட் டது. நடப்பாண்டில் 1.1.2016 முதல் 30.4.2016 வரை 1,885 முறை மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்று உள்ளன. இவற்றில், 48,607 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ.445 கோடியே 92 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நீதிமன்றங்களில் முடிவுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை சில மாதங்களாக மிகக் குறைவாக உள்ளன. 20 சதவீதத்துக்கும் குறைவான வழக் குகளில்தான் தீர்வு காணப்படு கிறது. மக்கள் நீதிமன்றம் நடை பெறும் நாளில் வழக்கில் தொடர்பு உடையவர்களில் ஒரு தரப்பினர் ஆஜராகாமல் தவிர்க்கின்றனர்.
பொதுவாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மக்கள் நீதிமன்றங்களில் அதிக அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வாகன விபத்து இழப்பீடு வழக்குகளைப் பொறுத்தவரை கீழமை நீதிமன் றங்கள் வழங்கக் கூறிய இழப் பீட்டுத் தொகையை குறைக்கக் கோரி காப்பீட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மேல்முறை யீட்டு மனுக்கள்தான் அதிக அள வில் விசாரணைக்கு பட்டியலிடப் படுகின்றன.
அதேசமயம் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக் கள் மக்கள் நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் சேர்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இழப்பீட்டுத் தொகையை குறைக்கக் கோரும் மேல்முறை யீடுகளை முடிப்பதில் ஆர்வம் காட்டும் காப்பீட்டு நிறுவனங்கள், கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கு களை முடிப்பதில் ஆர்வம் செலுத்துவது இல்லை. இதனால் விபத்துகளில் உறவுகள், உறுப்பு களை இழந்தவர்கள் உரிய நிவார ணம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியம் கூறிய தாவது:
காப்பீட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்குகளை விட, விபத்துகளில் பாதிக்கப்பட்ட வர்களின் மேல்முறையீட்டு வழக்கு கள் அதிக அளவில் நிலுவை யில் உள்ளன. இந்த மேல்முறை யீடுகளை மக்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் விசாரணைக்கு எடுத்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை வேகமாகக் குறை யும். இதேபோல் இப்பிரச்சி னைக்கு இதுதான் தீர்வு என நீதி மன்றங்களால் ஏற்கெனவே வரை யறுக்கப்பட்ட நிலையில், அதே பிரச்சினை தொடர்பான ரிட் மனுக் களுக்கும், மனுவைப் பரிசீலனை செய்யக் கோரி தாக்கலான மனுக் களுக்கும், ஓய்வூதியம் கோரும் மனுக்களுக்கும் லோக் அதாலத் தில் தீர்வு காணலாம் என்றார்.
காப்பீட்டு நிறுவனங்களின் வழக்கறிஞர் என்.இளங்கோவன் கூறியதாவது:
இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ததில் குறைபாடு உள்ளது என்ற காரணத்துடன் தாக்கலாகும் வழக்குகள்தான் மக்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப் படும். காலாவதியான ஓட்டுநர் உரிமம், காலாவதியான வாகன காப்பீடு தொடர்பான பிரச்சி னையை உள்ளடக்கிய வழக்கு களில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும்.
பாதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை விசார ணைக்கு வரவிடாமல் காப்பீட்டு நிறுவனங்கள் தடுப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சட்ட உதவி மையத்திடம் தெரிவித்தால் அவர் களின் வழக்குகளை பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT