Published : 09 Sep 2016 08:27 AM
Last Updated : 09 Sep 2016 08:27 AM
சென்னை டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் 15 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளன. 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளை யும் முடிக்க மெட்ரோ ரயில் நிறு வனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆலந்தூர் விமான நிலையம் இடையே சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதற்கிடையில், சைதாப்பேட்டை யில் இருந்து மே தின பூங்கா வரை யிலான பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம், பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காததால் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான எஞ்சிய பணிகளை மேற்கொள்ள எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், டிஎம்எஸ் முதல் மே தின பூங்கா வரை 48 சதவீதப் பணி கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை மேற்கொள்ளா மல், கடந்த 15 மாதங்களாக கிடப் பில் போட்டுவிட்டனர். இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டி களும், பொதுமக்களும் தினமும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், எஞ்சியுள்ள 4 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை எல் அண்ட் டி நிறுவனமும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது, மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
திட்ட மதிப்பு ரூ.600 கோடி
திட்ட மதிப்பீட்டு தொகை குறை வாக இருப்பதாக கூறி, நிறுவனங் கள் பணிகளைத் தொடங்குவதில் தயக்கம் காட்டின. இதனால், டிஎம்எஸ் முதல் மே தின பூங்கா வரையிலான பணிகள் 15 மாதங்களாக கிடப்பில் போனது. சுரங்கம் தோண்டும் பணி கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளில் 50 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள பணிகளை மேற் கொள்ள டெண்டர் மூலம் 2 நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளன. இதன் திட்ட மதிப்பு ரூ.600 கோடி. கடந்த 2 வாரங்களாக சுரங்கம் தோண்டும் பணியும், கடந்த ஒரு வாரமாக ரயில் நிலையங்கள் அமைக் கும் பணியும் நடந்து வருகின்றன. 2018 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள் ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT