Published : 30 Jun 2016 08:25 AM
Last Updated : 30 Jun 2016 08:25 AM

ஓய்வுபெற்றும் பலன்கள் கிடைக்கவில்லை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 1,100 பேர் தவிப்பு

தமிழ்நாடு மின்வாரியத்தில் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, பணி நியமனம் பெற்று ஓய்வுபெற்ற 1,100 ஊழியர்கள், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கடந்த காலங்களில், மின்வாரி யத்தில் அலுவலகப் பணியாளர் களுக்கு மட்டும் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. களப் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்தனர். 1986-ம் ஆண்டு மின்வாரியத் தலைவராக இருந்த பி.விஜயராகவன் என்பவர் மேற்கொண்ட முயற்சியால், களப் பணியாளர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கச் செய்தார். அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட களப் பணியாளர்கள், ஓய்வு பெற்றபோது ஓய்வூதியப் பலன்களை பெற்று பயனடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணி நியமனம் பெற்று, தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் கருத்துப் பணியாளர்கள், களப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் மின் வாரியம் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் ஓய்வுபெற்றும், எந்தவொரு ஓய்வூதியப் பலன்களையும் பெற முடியாமல் தவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டலத் தலைவர் ச.சசாங்கன் கூறியதாவது:

2003-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் 21,000 மஸ் தூர்கள், 1,000 உதவிப் பொறியாளர் கள், 8,000 ஐடிஐ கள உதவியாளர் கள், 1,200 கணக்கீட்டாளர்கள், 2,100 தொழில்நுட்ப உதவியாளர் கள் உட்பட 34,400-க்கும் மேற்பட் டோர் பணி நியமனம் செய்யப்பட் டனர். இவர்கள் அனைவரும் நேரடி நியமனம், நிலம் கையகப் படுத்துதல் நியமனம், வாரிசு பணி நியமனம் மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் மூலம் மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள், புதிய ஓய்வூதிய பங்களிப்புத் திட்டத்தில் சேர்க்கப் பட்டனர். இதற்காக ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 10 சத வீதத்தை மின்சார வாரியம் பிடித்தம் செய்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட 2003-ம் ஆண் டுக்குப் பிறகு மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், தற்போது பணி ஓய்வில் செல்லத் தொடங்கி உள்ளனர். தற்போது வரை 1,100 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப் படவில்லை. அதனால், ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதியப் பலன் கள் கிடைக்காமல் வேதனையுடன் ஓய்வு பெறுகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்றவர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு உடனே ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப்போது கிடைக்கும் ஓய்வூதிய பலன்?

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் மரணமடைந்தால், அவர்களுக்கு உடனே ஓய்வூதியப் பலன் வழங்கப்படுகிறது. வயது முதிர்வு அடிப்படையில் ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க, இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. அதற்கான உத்தரவைப் பெற மின்வாரிய தலைவருக்கு (சேர்மன்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அனுமதி வழங்கியதும், ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்காக வல்லுநர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அந்த குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x