Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

அரசியல்வாதிகள் துப்பாக்கி வைத்திருக்கத் தடை: கட்சிவாரியாக லைசென்ஸ் பட்டியல் தயாரிப்பு

அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியில் உள்ள தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் துப்பாக்கி களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள், தங்கள் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் நடவடிக் கைகள் முழுவதும் தேர்தல் ஆணைய உத்தரவின் படி, போலீஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும், நிர்வாகி களும் உளவுத்துறை போலீசின் தீவிர கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மற்றும் பல் வேறு மாவட்டங்களில் கட்சியின ரின் நடவடிக்கைகள், நடமாட்டங் கள் அனைத்தும், மத்திய, மாநில மற்றும் உள்ளூர் உளவுத் துறையினர் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.

தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், எதிர் பாராத வகையில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு, அரசியல் கட்சியி னரை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்காணிப்புப் பணியிலிருக்கும் உளவுத்துறை போலீ ஸார் மூலம், துப்பாக்கி வைத் திருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் உரிமம் வழங்கப்பட்டுள்ள 2,243 துப்பாக்கி களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை அரசியல்வாதிகளால் வாங்கப்பட்டிருப்பதாக பட்டியலில் தெரியவந்துள்ளது.

பாஜக, தேமுதிக, காங்கிரஸ், திமுக, அதிமுக, வி.சி. உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளில், துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்போரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந் தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு போலீஸாரிடமிருந்து அறிவுறுத்தல் கள் வந்துள்ளன.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது துப்பாக்கிகளை தாங்கள் உரிமம் வாங்கியிருக்கும் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களிலுள்ள ஆயுதக் கிடங்கில் கையெழுத்திட்டு, ஒப்படைப்பதாக அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது, ஒரு சில அரசியல்வாதிகள் கடைசி வரை துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் இழுத்தடித்ததால், இந்த முறை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசியல் கட்சியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியுடன் தோட்டாக்களையும் ஒப்படைக்க வேண்டுமென்பதால், பல அரசியல்வாதிகள் வெவ்வேறு ஊர்களில் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளைத் தேடிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைப்பதாக, தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x