Published : 20 Jul 2016 11:37 AM
Last Updated : 20 Jul 2016 11:37 AM
மதுரையில் பல்வேறு விதிமீறல் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை தடுக்க முகாமிட போவதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை போன்ற நகரங்களில் அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினரின் விதிமீறல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பிறர் பாதிப்பது அதிகரிக்கிறது. விதி மீறல்களை தடுக்க, அதிகாரிகள் முற்படாதபோது, சில சமூக ஆர்வலர்கள் தட்டிக்கேட்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் தான் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சென்னை உட்பட பிற மாவட்டத்திற்கு சென்று விதிமீறல், முறைகேடுகளை தட்டிக் கேட்டு வருகிறார். மதுரை உட்பட பல்வேறு இடங்களில் விதியை மீறி ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் மெகா சைஸ் பேனர்களை அகற்றும் பணியில் இறங்கியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி மதுரை வந்த அவர், 16-ம் தேதி திருப்பரங்குன்றம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அவ்வழியாக சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை மடக்கினார். ஆத்திரமுற்ற ஓட்டுநர்கள் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து தமுக்கம் மைதானத்தில் நடந்த அதிமுக மகளிரணி கூட்டத்துக்காக அக்கட்சியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள், போக்குவரத்துக்கு இடையறாக இருப்பதாக கூறி அகற்றினார். இது போன்ற விதிமீறல்களை தட்டிக் கேட்க மதுரையில் அடிக்கடி முகாமிட போவதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறி யதாவது: பிற மாவட்டங்களை விட, மதுரையில் விதிமீறல் அதிகரித்துள்ளது. டீசல் ஆட்டோ க்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அசுர வேகத்தில் இயக்குவதால் விபத்து அதிகரிக்கின்றன என,பொதுமக்களும், டீசல் ஆட் டோக்கள் அதிகரிப்பால் தொழில் பாதிக்கிறது என, பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல மதுரை நகரில் முறையான பார்க் கிங் வசதி இல்லை. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் முறையாக அனு மதி பெறுவதில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது.
இதற்காக கடந்த 15ம் தேதி நான் மதுரை வந்தேன். ஆட்டோக்கள் விதிமீறல் குறித்து போலீஸ் ஆணையரிடம் புகார் செய்தேன். 15 நாளில் அனுமதியின்றி ஓடும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது. 2007க்கு பி்ன், டீசல் ஆட்டேக்களுக்கு உரிமம் வழங்க கூடாது என்ற உத்தரவு இருந்தும், 2007க்கு பின், 18 ஆயிரத்தில் இருந்து 32 ஆயிரமாக டீசல் ஆட்டோக்கள் அதிகரித்துள்ளன. அரசியல் கூ;ட்டம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு முறையான அனுமதி இன்றி மெகா பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர். இதற்கு அதிகாரிகள் துணை போகின்றனர். ரவுடியிசமும் அதிகரித்துள்ளது.
மதுரையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது குறித்து ஏற்கெனவே, நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மதுரையில் முகாமிட்டு, பல்வேறு விதிமீறல் குறித்து அதிகாரிகளிடம் புகார் கொ டுக்க உள்ளேன். தேவைப்பட்டால் வழக்கு தொடருவேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT