Published : 12 Aug 2016 10:31 AM
Last Updated : 12 Aug 2016 10:31 AM

தமிழகத்தில் பிசியோதெரபி படித்துவிட்டு வேலையில்லாமல் அவதிப்படும் 40,000 இளைஞர்கள்

உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் மக்களுக்கு ஒரு இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபி) இருக்க வேண்டும் என சொல்கிறது. ஆனால், தமிழகத்தின் மக்கள் தொகையில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு இடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு இயன்முறை மருத்துவர்கூட இல்லை.

உடல் ரீதியான இயக்கக் குறைபாடுகள் ஏற்படுகிறவர்களுக்கு அவற்றைச் சரி செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண் டுவருவதில் நவீன மருத்து வத் தின் மருந்து, மாத்திரைகளுக்கு மாற்றாக இயன்முறை மருத்துவ சிகிச்சை திகழ்கிறது. தற்போது முதியோர்கள் மட்டுமில்லாது எல்லா வயதினரும் மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி உள்ளிட்ட நடமாட்டத்தைக் குறைக்கும், முடக்கும் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். அதனால், ஒரு நபர், ஆரோக் கியமான உடல் திறனுடன் இருக்க வும், உடல் பருமன் மேம்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இயன்முறை மருத்துவம் மிக அத்தியாவசிய தேவையாகி விட்டது. ஆனால், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் வருகை விகிதாச்சாரப்படி இயன்முறை மருத்துவர்கள் பணிபுரிவதில்லை.

97-ஆம் ஆண்டு வரை படித்த வர்களுக்கு மட்டுமே, இத்துறை யில் அரசுப் பணி கிடைத்துள்ளது. அதனால், கடந்த 19 ஆண்டுகளாக தற்போது வரை இயன்முறை மருத்துவப் படிப்பு (நான்கரை ஆண்டுகள்) முடித்த 40 ஆயிரம் இளைஞர்கள், அரசுப் பணி கிடைக்காமல் ஏக்க முடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து இயன்முறை மருத்துவர்கள் பெருமன்ற மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் கூறும் போது, “தமிழக அரசு மருத்து வமனைகளில் தினமும் 5 லட்சத் துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனைகளில் மொத் தமே 160 இயன்முறை மருத்துவப் பணி யிடங்கள் மட்டுமே உள்ளன. இந்த பணியிடங்களிலும் சில காலியாக உள்ளன. தனியார் மருத் துவ மனைகளில் இந்த சிகிச்சைப் பெற நாளொன்றுக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக் கிறது. ஆனால், இந்த சிகிச்சையை ஒரு நபர் தொடர்ச்சியாக 10 நாட்களோ, 30 நாட்களோ கட்டா யம் பெற்றால் மட்டுமே குணம டைய முடியும். எனவே, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே, இந்த சிகிச்சை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதிய பணியிடங்களை உருவாக் குவது அரசின் கொள்கை முடிவு. அரசிடம் கூடுதல் பணி நியமனம் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

மூடப்பட்ட கல்லூரிகள்

கிருஷ்ணகுமார் கூறும்போது, “மருத்துவர்கள், செவிலியர் கள், மருந்தாளுநர்கள், தங்கள் படிப்புகளைப் பதிவு செய்யவும், பணிபுரியவும், பணி பாதுகாப்புக்கும் தனித்தனி மருத்துவ கவுன்சில் கள் செயல்படுகின்றன. இயன்முறை மருத்துவர்களை ஒழுங்குபடுத்த, பாதுகாக்கக்கூடிய கவுன்சில் இல்லை. இந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்பு குறைந்ததால் 2000-ம் ஆண்டில் 75 இயன்முறை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்ட தமிழகத்தில் தற்போது திருச்சி, சென்னை யில் இருக்கும் 2 அரசுக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 28 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. மற்ற கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x