Published : 28 Jan 2017 10:03 AM
Last Updated : 28 Jan 2017 10:03 AM
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கோவா, லட்சத் தீவுகள் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 6 முதல் 28-ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயது வரையிலான 1 கோடியே 80 லட்சம் சிறாருக்கு, ரூபெல்லா தட்டம்மை நோய் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத் துறை நட வடிக்கை எடுத்து வருகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் இதன்மூலம் கிடைக்கும் பலனுக்கு ஏற்ப, தேசிய அளவில் திட்டம் விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது
பொதுவாக டிப்தீரியா, டெட்ட னஸ், பெர்டசிஸ், ஹிப்பாடிடஸ்-பி மற்றும் ஹீமோபீலஸ் இன்புளுயன்சா-பி என பென்டா வேலன்ட் எனப்படும் ஒரே பேக்கில் ஐந்து தடுப்பூசிகள் போடப்படுகின் றன. குழந்தையின் 9-வது மாதத் தில் தட்டமை தடுப்பூசி போடப் படுகிறது. தற்போது அரசு மூலம் அந்த தடுப்பூசியுடன், இதயம், கேட்கும் திறன், பேசும் திறன், கண் பார்வைக்குமான ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போட வலி யுறுத்தப்படுகிறது. இதன்படி ரூபெல்லா தடுப்பூசி, தேசிய அளவிலான இயக்கமாகக் கொண்டு, பரிசோதனை அடிப்படை யில் தமிழகத்தில் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கான முகாம் கள் பிப்ரவரி மாதம் 6 முதல் 28-ம் தேதி வரை என 4 வார காலம் நடத்தப்பட உள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில், தமி ழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளிலும், அங்கன் வாடி மற்றும் அரசு மருத்துவமனை உட்பட மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கும் தடுப் பூசி போடப்படும். 2 மற்றும் 3-வது வாரங்களில் பள்ளி, அங்கன்வாடியுடன் பிற இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் போடப்படும். 4-வது வாரம் விடுபட்ட வர்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் இத்தடுப்பூசி அங்கன்வாடி மையங்களில் போடப்படவுள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொள்ளும் தருணத்தில் தடுப்பூசி போடுவது என்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தினால், மாணவர்கள் தேர்வு பாதிக்கும் என பள்ளி ஆசிரியர்களும், ரூபெல்லா காய்ச்ச லுக்கான எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில் தமிழகத்தில் இந்தத் தடுப்பூசி அவசியம் தானா என சுகாதாரத் துறையினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் மருதவாணண் கூறும்போது, “பொதுவாக அமெ ரிக்க நிறுவனங்களின் மருந்துகள் இந்தியாவில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவது வாடிக்கை யாகி வருகிறது. மேலும் ரூபெல்லா தட்டம்மை காய்ச்சலுக் கான அறிகுறிகள் வடகிழக்கு மாநிலங்களில்தான் காணப்படு கின்றன. எனவே அங்குதான் தடுப்பூசி அவசியம்.
பரிசோதனை அடிப்படையில் தமிழகம் தேர்வு செய்யப்படுவதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.
நோய்க்கான அறிகுறியே இல்லாத பகுதியில் ஒரு மருந்தை டெஸ்ட் செய்து, அதை வெற்றிபெற்றதாக அறிவித்து, சந்தைப்படுத்தக்கூடிய வணிகமாக இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.
சொட்டு மருந்து, யானைக்கால் மாத்திரை உள்ளிட்டவை சில நேரங் களில் சிலருக்கு பக்க விளைவு களை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் ஊசி என்பது நேரடி யாக ரத்தத்தில் கலக்கக் கூடியது.எனவே மாணவர்கள் பள்ளித் தேர்வை எதிர்கொள்ளும் தருணத் தில் ரூபெல்லா தட்டம்மை தடுப் பூசி போடுவதைத் தவிர்த்து, பரிசோதனை அடிப்படையில் தடுப் பூசி தமிழகத்தில் மேற்கொள்வதை அரசு தவிர்க்க வேண்டும்” என்கி றார்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறும் போது, “கர்ப்பம் தரித்த பெண்கள் ரூபெல்லா தட்டம்மை நோய் பாதிப் புக்கு உள்ளானால், பிறக்கும் குழந்தையையும் இந்த நோய் பாதிக்கும் அபாயம் உள்ளதால் இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அரசு முடிவெடுத் துள்ளது. இவை எந்த பக்க விளைவு களையும் ஏற்படுத்தாது என்பதுடன், எதிர்கால சந்ததியினரும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற் றப்படுவர்” என்றார்.
இது தொடர்பாக மாநில சுகாதா ரத் துறை அமைச்சர் விஜயபாஸ் கரிடம் கேட்டபோது, “உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் அனுமதி அளிக்கப்பட்ட இந்த தடுப்பூசி எந்த பக்க விளைவுகளையும் ஏற் படுத்த கூடியது அல்ல. இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த மருந்தை ஆய்வு செய்து உத்தர வாதம் அளித்துள்ளதால் இந்தத் தடுப்பூசி குறித்து எந்த அச்சமும் தேவையில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT