Published : 24 Jan 2017 08:29 AM
Last Updated : 24 Jan 2017 08:29 AM

பாலமேட்டில் பிப். 2-ம் தேதி நடக்கிறது: பிப். 1-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - போராடிய மாணவர்களுக்கு உருக்கமான அழைப்பு

அலங்காநல்லூரில் பிப்.1-ம் தேதியும், பாலமேட்டில் பிப். 2-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழு முடிவு செய்துள்ளனர். ஊர் கமிட்டியில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க போராட்டம் நடத்திய மாணவர் களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஜல்லிக்கட்டை மாணவர்கள் பார்க்க வர வேண்டும் என்றும் அப்போது அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் தடை விதித்த தால் தமிழகத்தில் கடைசியாக 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடந் தது. இந்த ஆண்டும் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் பொங்கல் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

பாலமேடு, அவனியாபுரத்தில் போலீஸார் வாடிவாசலுக்கு சீல் வைத்ததால் ஜல்லிக்கட்டு நடக்க வில்லை. ஆங்காங்கே சாலைகளில் மட்டுமே காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் போலீஸாரின் லேசான தடியடியுடன் போராட்டங் கள் கைவிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க போலீஸார் அங்குள்ள வாடிவாசலுக்கு ‘சீல்’ வைத்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர் கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன் திரண்ட தால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

காளைகளை வாடிவாசல் அரு கேயும், சாலைகளிலும் அவிழ்த்து விட்டதால் போலீஸார் அலங்காநல் லூரிலும் தடியடி நடத்தினர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் மறுநாள் ஜன. 17-ம் தேதி போராட் டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடத் தொடங்கி யதால் மாணவர்கள் போராட்டத் துக்கு தமிழக அரசு பணிந்தது. அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த முனைந் தது.

இதற்காக அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்தார். ஆனால், அலங்காநல்லூர் மக்கள், ஊருக்குள் முதல்வர் நுழைய தடை விதித்து சாலைகளில் மாட்டு வண்டிகள், மின் கம்பங்களை வைத்து தடுப்புகளை அமைத்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை கைவிட்டு சென்னைக்கு திரும்பினார்.

நேற்று 8-வது நாளாக அலங் காநல்லூரில் மாணவர்களும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களி டம் போராட்டத்தை கைவிடும்படி ஊர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர், வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், உள்ளூரில் மக்களில் ஒரு பிரிவினரும், போராட்டக்கார்களும் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

அதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஊர் கமிட்டி உறுப் பினர்கள், கமிட்டி செயலர் வி.சுந்தரராகவன் தலைமையில் வாடிவாசல் அருகே காளியம்மன் கோயில் முன் கூடினர்.

இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக் காக இதுவரை நடத்திய போராட் டத்தை கைவிடுவதாகவும், அலங் காநல்லூரில் பிப். 1-ம் தேதி ஜல்லிக் கட்டு நடத்தவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உதவிய மாணவர்களுக்கு கோடி நன்றி தெரி விப்பதாகவும் நிறைவேற்றினர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு

அதுபோல் பாலமேட்டில் பிப்.2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அந்த ஊர் கமிட்டி நிர்வாகிகளும், பொதுமக்களும் முடிவு செய்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு ஊர் கமிட்டி செயலர் கார்த்திகைராஜன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஊர் கமிட்டி செயலர் வி.சுந்தரராகவன் ஆகியோர் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண தமிழகம் முழுவதும் உள்ள மாணவச் செல் வங்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x