Published : 28 Jun 2019 07:47 AM
Last Updated : 28 Jun 2019 07:47 AM

தமிழகத்தில் எங்கெங்கு நீர் ஆதாரம் இருக்கிறது?- ‘ஆல்பம்’ தயார் செய்துள்ள குடிநீர் வடிகால் வாரியம்

தமிழகத்தில் எந்தெந்த இடத்தில் நீர் ஆதாரம் இருக்கிறது, மழை பெய்தால் தண்ணீரை சேகரிக் கலாம், எங்கெங்கு நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ‘ஆல்பம்’ தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் குடிநீர் விநியோகத் துக்கு 1971-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரி யம் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் மூலம், 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப் படுகின்றன. இதுதவிர மக்கள் தொகை அடிப்படையில், பஞ் சாயத்து முதல் மாநகராட்சி வரை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எந்த அளவுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது, இருக்கும் நீராதாரங் களில் தேவைக்கேற்ப நீர் கிடைக் கிறதா, புதிய நீர் ஆதாரங்களை கண் டறிதல், புதிய திட்டங்களை தயா ரித்தல், 30 ஆண்டுகள் நிறைவு பெற்ற குடிநீர் திட்டங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

குழாய் உடைப்பு

குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு 2,146 எம்எல்டி குடி நீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், நிலத்தடி நீர் பற்றாக்குறையால், தற்போது 1,800 எம்எல்டி குடிநீரே விநி யோகம் செய்யப்படுகிறது. அதி லும், குழாய் உடைப்பு, மின் தடை, பற்றாக்குறையால் பொது மக்களுக்கு குடிநீரை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் திட்டங்கள், மக்கள் தொகை அடிப்படையில் 30 ஆண்டுகள் தேவையை கணக்கில் கொண்டே உருவாக்கப் படுகின்றன. மக்கள் தொகை எதிர் பார்த்ததை விட அதிகரிக்கும் போதும், மழை பொய்க்கும் போதும் குடிநீர் பற்றாக்குறை ஏற் படுகிறது.

கட்டமைப்பு உருவாக்கம்

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: குடிநீரை தட்டுப்பாடில்லாமல் விநியோகிப் பது அரசின் கடமையாக இருந் தாலும், பொதுமக்களும் மழை நீரைச் சேமிக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வீடுகள், நிறுவனங்கள், தோட்டங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு விவ சாயி, ஓர் ஏக்கர் நிலம் வைத்திருந் தால் கூட, அந்த நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும்.

வறட்சிக் காலத்தில் மழைநீர் மிகவும் உதவியாக இருக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் நிலத்தடி நீர் 13.70 மீட்டரில் கிடைத்தது. தற்போது வறட்சியால் 17.50 மீட்டருக்கு கீழ் போய்விட்டது.

குடிநீர் வடிகால் வாரியம் இந்தியாவிலேயே முதல் முறை யாக தமிழகத்தில் 32 மாவட்டங் களில் எந்தெந்த இடங்களில் நிலத் தடி நீர் இல்லை, குடிநீர் பற்றாக் குறை இருக்கிறது, எங்கெங்கு மழை பெய்தால் தண்ணீர் தேங் கும், எந்த இடத்தில் தண்ணீர் உறிஞ் சும் தன்மை அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து ஓர் ‘ஆல்பம்’ தயார் செய்துள்ளது.

ஆழ்துளை கிணறு

இந்த ஆல்பத்தில் எங்கு தண்ணீர் அதிகமாக இருக்கிறது, எங்கு எளிதாக தண்ணீர் எடுக் கலாம் உள்ளிட்ட விவரங்கள் உள் ளன. இந்த ஆல்பம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், பிடிஓ அலு வலகங்களில் தாராளமாகக் கிடைக் கும். தனியார், அரசு நிறுவனங்கள், இந்த ஆல்பத்தில் உள்ள விவரங் களின் அடிப்படையில் குடிநீர் திட்டங்களையும், ஆழ்துளை கிணறுகளையும் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x