Last Updated : 28 Jun, 2019 05:10 PM

 

Published : 28 Jun 2019 05:10 PM
Last Updated : 28 Jun 2019 05:10 PM

மதுரையில் காவலரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது

மதுரையில் காவலரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், பனங்காடியைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டி(50). இவர், ஆலத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்தார்.

சமீபத்தில் இவரை ஆலத்தூர் பகுதியில் புதிய வீடு கட்டுவது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் சங்கரலிங்கம் அணுகினார். பிளான் அனுமதிக்கு சுந்தரபாண்டி ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இத்தொகை கொடுக்க விரும்பாத சங்கரலிங்கம் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் யோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை சுந்தரபாண்டியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) சங்கரலிங்கம் கொடுத்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்ய சீலன், காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கையும், களவுமாக சுந்தரபாண்டியை பிடித்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x