Published : 04 Sep 2018 09:27 AM
Last Updated : 04 Sep 2018 09:27 AM
தமிழகத்தில் கைவிடப்பட்ட ஆழ் துளைக் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பருவமழை ஓரளவுக்கு பரவலாக பெய்வதால் அந்த ஆழ்துளைக் கிணறுகளை மீட்க வேளாண் பொறியாளர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 300 அடி முதல் 650 அடி வரை மட்டுமே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது முறையற்ற நீர் மேலாண்மை, பயிர்களை அதற்கேற்ற நிலங்களில் பயிரிடா மல் அனைத்துவகை நிலங்களிலும் பயிரிடத் தொடங்கியதால் தண்ணீர் தேவைக்காக 1,400 அடி முதல் 1,600 அடி வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து வருகின் றனர்.
ரூ.3 லட்சம் வரை நஷ்டம்
இந்த ஆழ்துளைக் கிணறு களுக்கு முறையான நிலத்தடி நீரைச் செறிவூட்டும் நடவடிக்கை இல்லாததாலும், மழைநீர் சேக ரிப்பு விழிப்புணர்வு இல்லாததா லும், விரைவில் அவை வறண்டு விடுகின்றன. இதனால் கைவிடப் பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு ஆழ்துளைக் கிணறு கை விடப்படுவதால், விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளுக்குப் பதிலாக புதிய ஆழ்துளைக் கிணறு அமைப் பதை தவிர்த்து, பழைய கிணறு களையே மீட்டெடுக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பிரிட்டோ ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆழ்துளைக் கிணறுகளைப் புனர மைத்து செறிவூட்டி, அதிலிருந்து நீர் பெறுவது எளிதானது. செல வும் குறைவு. இதனை, தற் போது பருவமழை பெய்யும் காலகட்டத்தில் மேற்கொள்ளலாம்.
பொதுவாக அனைத்து வகை சரிவான நிலங்களிலும் வெளிப் பகுதிகளிலும் உட்பகுதிகளிலும் சரிவின் குறுக்கே மூன்று அடி உயர வரப்புகளை அமைக்கலாம். படிப்படியாக உள்ள நிலங்களில் தாழ்வான பகுதிகளில் சிமென்ட் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் அடுத்து கீழ் உள்ள நிலங் களுக்கு நீரைக் கடத்தி ஓரிடத்தில் சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக் கும் அமைப்பு, பண்ணை குட்டை எனப்படும். இந்த பண்ணைக் குட்டைகளையோ அல்லது வரப்பு களையோ நிலத்தில் ஏற்கெனவே அமைத்த ஆழ்துளைக் கிணறு அல்லது கிணறுகளின் மேல்பகுதி களில் அமைக்கலாம்.
தூர்ந்துபோன அல்லது 10 நிமிடங்களுக்கு குறைவாக மட்டுமே தண்ணீர் வரக்கூடிய ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி, 10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட குழிகளை வெட்டலாம். இந்தக் குழிகளை வெட்டியபிறகு ஆழ்துளைக் கிணற்றின் வெளியே தெரியும் குழாயில் 10 அங்குலம் அல்லது பதினைந்தரை (15.5) அங்குலம் விட்டமுள்ள 10 முதல் 15 துளைகளை ஏற்படுத்தலாம். பின்பு பெரிய துளையுள்ள கொசு வலையை ஆழ்துளைக் குழாயின் மீது சுற்றி வடிகட்டியாக கட்டிவிடலாம்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளவர்கள் 5 அடி ஆழ குழி வெட்டினால் போதுமானது. இந்தக் குழிகளில் அதன் முக்கால் அளவு உயரத்துக்கு கிணற்றுக்கல் அல்லது உடை கற்கள் எனப்படும் பெரிய கற்களைக் கொண்டு நிரப்பி விட வேண்டும். தரைமட்டத்தில் இருந்து ஒரு அடி ஆழம் வரையிலான மேல்பகுதியில் பெரிய கற்களுக்கு மேல் 40 எம்எம் ஜல்லி கற்கள் அல்லது ஒன்றரை ஜல்லிகளை கொண்டு நிரப்பலாம்.
மீதமுள்ள மேல்பகுதியில் உள்ள ஒரு அடி ஆழக் குழியில் பக்கவாட்டுப் பகுதிகளைச் செங் கற்களை வைத்து அல்லது முறையான கற்களைக் கொண்டு கட்டி விடலாம்.
நீர் இந்த குழிக்குள் உட் புகும் இடத்தில், இச்சுற்றுச் சுவரில் வழிகளை ஏற்படுத்தலாம். அதனால், நிலத்தில் வழிந்தோடி வரும் மழைநீர் சுற்றுச்சுவரின் வழியே ஒரு அடி ஆழத்தில் உள்ள சிறு கற்கள் வழியே சென்று குழி களில் நிரம்பும். இதன்மூலம் கை விடப்பட்ட ஆழ்துளைக் கிணறு களை எளிதாக மீட்டெடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT