Published : 26 Sep 2018 03:51 PM
Last Updated : 26 Sep 2018 03:51 PM
தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவர் இலங்கைக்கு படகில் செல்ல முயன்றபோது இன்று காலை தங்கச்சிமடம் அருகே சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கைப் போருக்கு பிறகு தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து பிளாஸ்டிக் படகில் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
சட்டவிரோதமாக நாடு கடந்து செல்லும் அவரின் முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் தங்கச்சிமடம் கடற்கரைப் பகுதியில் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட அகதியின் பெயர் ரமணி என்று தெரியவந்துள்ளது. இவர் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்.
எந்த ஆவணமும் இன்றி, ரகசியமாக இந்தியாவிலிருந்து படகில் அவர் தப்பிச் செல்ல முயன்றது ஏன் என்பதற்கான காரணத்தை அறிய, இலங்கைத் தமிழ் அகதி ரமணியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT