Published : 22 Sep 2018 10:45 AM
Last Updated : 22 Sep 2018 10:45 AM

சுவாமிதேசிகன் 750-வது திருநட்சத்திர வைபவம்: வில்லிவாக்கம் மணிமண்டபத்தில் 28 நாள் உற்சவம் நிறைவு

சென்னை வில்லிவாக்கம் சேவா சுவாமி மண் டபத்தில் 28 நாட்களாக விமரிசையாக நடந்த சுவாமி தேசிகனின் 750-வது திருநட்சத்திர மகோற்சவம் நேற்று நிறைவடைந்தது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னதி 1969-ல் ஸ்ரீ அர சாணி பாலை நல்லூர் ஸ்ரீநிவாச ராகவாச் சார்யர் சுவாமியால் (ஸ்ரீ சேவா சுவாமி) தொடங்கப்பட்டது. சுவாமி தேசிகனின் புகழையும், அவர் அருளிச் செய்த க்ரந்தங் களையும் மக்களிடம் பரப்ப வில்லிவாக்கத் தில் அவர் ஒரு மண்டபத்தை நிறுவினார்.

சுவாமி தேசிகன் திருப்பதி வேங்கடேச பெருமான் மணியின் அவதாரமாக கருதப்படு வதால் இந்த மண்டபத்துக்கு மணிமண்டபம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஆண்டாள், சுவாமி நம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், சுவாமி தேசிகர், ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மி தாயார் விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஸ்ரீ உ.வே.சேவா சுவாமி இந்த மணிமண்டபத்தை ‘ஞானபஞ்சாயதநம்’ என்பார். அவர் இங்கு பல உபன்யாசங்களை நடத்தியுள்ளார். பல்வேறு ஸ்தோத்திர, சங்கீத பாட வகுப்புகளும் இங்கு நடந்துள்ளன. ஸ்ரீதேசிக தர்ஷன டைரி, ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆராய்ச்சி மையம், ஸ்ரீவேங்கடநாத நூலகம், சிரவண உபன்யாசங்கள் போன்ற திட்டங்களால் தேசிகரின் ஸ்தோத்திரங்கள், பல மொழிகளில் வியாக்யானம் எழுதப்பட்டு பலருக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சுவாமி தேசிகனின் 750-வது திருநட்சத்திர மகோற்சவத்தைக் கொண்டாடும் விதமாக சென்னை வில்லிவாக்கம் சேவா சுவாமி மண்டபத்தில் சேவா டிரஸ்ட் சார்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி (ஸ்ரீஹயக்ரீவர் திருநட்சத்திரமான ஆவணி திருவோணம்) முதல் நேற்று (சுவாமி தேசிகனின் திருநட்சத்திரமான புரட்டாசி திருவோணம்) வரை 28 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

வேத, பிரபந்த, தேசிக ஸ்ரீ ஸூக்தி பாரா யணம், சுவாமி தேசிகன் திருவீதி புறப்பாடு, சஹஸ்ரநாம அர்ச்சனை, சங்கீதாராதனம், உபன்யாசம், கோஷ்டி பாராயணம், சாற்று முறை, ததியாராதனம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த 10 நாட்களாக தினம் ஒரு வாகனத் தில் சுவாமி தேசிகன் வீதியுலா வந்தார். நிறைவு நாளான நேற்று சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

இதுகுறித்து சேவா சுவாமியின் மகனும், சேவா டிரஸ்ட் செயலாளருமான என்.எஸ்.கண்டாமணி கூறியபோது, ‘‘சேவா டிரஸ்ட் சார்பில் ஆன்மிக முகாம்கள், திவ்யதேச யாத்திரைகள், மணிமண்டப உற்சவங்கள், கருத்தரங்குகள் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போது நடத்தப்பட்ட 28 நாட்கள் உற்சவத்தின்போது, தாமல் ராமகிருஷ்ணன், கருணாகராச்சாரியார் உள்ளிட்டோர் உபன்யாசம் நிகழ்த்தினர்’’ என்றார்.

நிறைவு நாளான நேற்று, சுவாமி தேசிகன் எழுதிய ஸ்ரீவைராக்கிய பஞ்சகம் நூலின் விளக்கவுரை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. சுவாமி தேசிகன் அருளிய ‘சில்லரை ரகசியங்கள்’ விளக்கவுரை நூல் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x