Published : 03 Sep 2018 08:58 AM
Last Updated : 03 Sep 2018 08:58 AM

பைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்; வாகனங்களுக்கு ஏற்ப ரூ.1,500 முதல் ரூ.5,000 வரை வசூல்: இனி வாங்கும் இடத்திலேயே பதிவுச் சான்று வழங்க அரசு திட்டம்

புதிய இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்கும்போது ஆர்டிஓ கட்டணம் எனக்கூறி, வாடிக்கை யாளர்களிடம் வாகனத்துக்கு ஏற்ற படி அதிக தொகையை விற்பனை யாளர்கள் வசூலிக்கின்றனர். வட் டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) வேலைக்காக எனக்கூறி இந்த தொகை வசூலிப்பதாகவும் இந்த முறைகேட்டை தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 81 வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் உள்ளன. இது தவிர 60-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 7,434 பேர் புதியதாக வாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், உரிமையா ளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்நிலை யில் புதிதாக வாகனங்களை வாங்கும்போது இதர கட்டணமாக விற்பனையாளர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வாடிக்கை யாளர்கள் சிலர் ‘இந்து தமிழ்’ நாளி தழிடம் கூறும்போது, "வாகனங் களின் விலை, சாலை வரி உட்பட அனைத்து வகை கட்டணத்தையும் சேர்த்து மொத்த விலை கொண்ட விலைப்பட்டியல் அளிக்கப்படு கிறது. கூடவே ஆர்டிஓ கட்டணம் என கூறி ரூ.1,500 வரையிலும் கார் களுக்கு ரூ.5000 வரையிலும் விற் பனையாளர்கள் கட்டணம் வசூலிக் கின்றனர்" என்று அவர்கள் கூறினர்.

ஆர்டிஓ அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.200, அதிக சிசி திறன் கொண்ட வாகனம் என்றால் ரூ.300, இதேபோல் கார் ஒன்றுக்கு ரூ.600, பெரிய சொகுசு வகை காருக்கு ரூ.1000 வரை மட்டுமே பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவும் தற்போது இணைய தளம் மூலமாகவே கட்டணம் செலுத் தப்படுகிறது. எங்கள் பெயரைச் சொல்லி விற்பனையாளர்கள் சிலர் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்’’ என்கிறார்கள்.

இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ மத்திய அரசு தற் போதுள்ள இணையதள சர்வரை தரம் உயர்த்தி வருகிறது. இதன் மூலம் விண்ணப்பித்த அன்றே பதிவுச்சான்று, நம்பர் பெற வழிவகை செய்யப்படும். மேலும் வாகனம் வாங்கும் இடங்களிலேயே பதிவுச்சான்று பெறும்

திட்டத்தை மத்திய அரசு சில இடங்களில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஷோரூமுக்கே சென்று வாகனத்தை ஆய்வு செய்து, ஆன்லைன் மூலம் ஆர்டிஓவுக்கு ஆவணம் அனுப்பி வைப்பார். தமிழகத்தில் விரைவில் அத்திட்டம் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடி யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே ஐஆர்டிஏ உத்தரவுப்படி, வாகனங்களுக்கான புதிய காப்பீடு கட்டணம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இன்ஜின் திறன்களுக்கு ஏற்ப கார்களுக்கு 3 ஆண்டுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.5,286 முதல் ரூ.24,305 ஆகவும் இரு சக்கர வாகனங்களுக்கு இன்ஜின் திறனுக்கு ஏற்ப ரூ.1,045 முதல் அதிகபட்சமாக ரூ.13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீடு கட்டணத்தையும் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x