Last Updated : 08 Sep, 2018 07:58 AM

 

Published : 08 Sep 2018 07:58 AM
Last Updated : 08 Sep 2018 07:58 AM

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ: மதுரை சிறை பெண் எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல்;  போலீஸ் விசாரணை தீவிரம்

சிறைத்துறை பெண் எஸ்பிக்கு தேனியைச் சேர்ந்த பிரபல ரவுடி விடுத்த கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மதுரை காவல்துறை ஆணையர் தனிப்படை அமைத்து மிரட்டல் விடுத்த ரவுடியைப் பிடிக்க உத்தர விட்டுள்ளார்.

தேனி மாவட்டம், பெரிய குளத்தை அடுத்த ஜெயமங்க லத்தைச் சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புல்லட் நாக ராஜன், மதுரை சிறைத்துறை பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்துப் பேசியதாக செல்போன் ஆடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

ஆடியோ விவரம்

புல்லட் நாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவரம்: தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் இல்லை. என் கண் முன்னே எத்தனையோ கைதிகளை அடித்துள்ளீர்கள். மதுரை ஜெயிலை பொருத்தவரை உங்க ளுக்கு (எஸ்பிக்கு) நிர்வாகத் திறமை இல்லை. கமாண்டோக் களை வைத்து கைதிகளை தாக்கு கிறீர்கள். சிறைக் கைதியை அடித்த, ஒரே காரணத்தால் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவரை எரித்துக் கொன்றது ஞாபகம் இருக்கா? ஏன், நீங்கெல்லாம் திருந்தமாட்டீங்கிறீங்க. நாங்கெல் லாம் திருந்தி படித்து, பெரிய ஆளாகி இருக்கோம்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. அதைப் பற்றி புல்லட் நாகராஜன் கவலைப்படமாட்டான். மேடம், உங்களுக்கு ஒரேயொரு வாய்ப்பு தருகிறேன். தலைமைக் காவலர் ஒருவர் கஞ்சா கடத்துறவரு. அவரை வச்சு கைதிகளின் காசை கொள்ளை யடிக்கிறீங்க. இதெல்லாம் வெட் கமா இல்லையா?

நான் பழைய புல்லட் நாக ராஜன் கிடையாது. நீங்க எப்படி யும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒன்னும் செய்ய மாட்டேன். பசங்க ஏதாவது செய்திடுவாங்க… சிறையில் நீங்ககெல்லாம் வாட்ச்மேன் மாதிரி தான். நீங்க போலீஸே கிடையாது. இனிமேல், புகார் வந்தால் சும்மா விடமாட்டேன்.

டிஐஜி ஒருவரையே நீதிமன்றக் கூண்டில் ஏற்றியவன். கைதிகளின் காசை கொள்ளையடித்தால் நல்லா இருக்க முடியுமா? கைதிகளின் மனைவிகளிடம் ஒரு அதிகாரி தவறாக நடக்கிறார். தர்மம் ஜெயிக்கும், என் பக்கம் தர்மம் இருக்கிறது என பேசியுள்ளார். இந்த மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸில் புகார்

சிறைக் கண்காணிப்பாளர் ஊர் மிளா கூறும்போது, "ஆடியோ வெளியான தகவல் எனக்கு உடனடி யாக தெரியவில்லை. புல்லட் நாக ராஜனை நான் பார்த்ததே கிடை யாது. இருப்பினும், வைரலாக பரவுவதால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதன்பேரில், மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனிப் படை அமைத்து புல்லட் நாகராஜனை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x