Published : 25 Sep 2018 09:03 AM
Last Updated : 25 Sep 2018 09:03 AM
எம்பி, எம்எல்ஏ தேர்தலை மிஞ்சும் அளவுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடந்து வருகிறது. பார் கவுன்சில் தலை வர் பதவியைப் பிடிக்க தற்போது உறுப்பினராக தேர்வு செய்யப்பட் டுள்ள 25 பேரில் 9 பேருக்கிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டம் 1961-படி, அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பார் கவுன்சில் நீதிபரிபாலனம் சிறந்து விளங்க நீதித்துறைக்கும் வழக்கறிஞர்கள் சமூகத்துக்கும் உறவுப்பாலமாக விளங்குகிறது. சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக தொழில் செய்ய வருபவர்களைப் பதிவு செய்வது, வழக்கறிஞர்களின் தகவல்களை முறையாகப் பரா மரிப்பது. வழக்கறிஞர்களின் தொழில் மாண்பை காப்பது. அவர் களுக்கான உரிமைகள், சலுகை கள், நலத்திட்டங்களுக்காக பாடுபடுவது, சட்டக்கல்வியின் தரத்தை உயர்த்துவது என பார் கவுன்சிலுக்கான பணிகள் ஏராளம்.
இத்தகைய பாரம்பரியமிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்தது. மொத்தம் 192 பேர் போட்டியிட்டனர். 54 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 42 ஆயிரம் வழக்கறிஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி செப்.22-ம் தேதி வரை வாக்குகள் எண்ணப்பட்டு 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியல் ஒப்புதலுக்காக அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரேயொரு பெண் உறுப்பினர்
இந்த 25 பேரில் ஒருவரை பார் கவுன்சில் தலைவராகவும் ஒரு வரை துணைத் தலைவராகவும் ஒருவரை அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்ற அனுமதி யுடன் அகில இந்திய பார் கவுன் சில் பிறப்பித்ததும் அடுத்தகட்ட தேர்தல் நடைபெறும். 25 ஆண்டு கள் கழித்து தற்போது பார் கவுன் சிலுக்கு பெண் ஒருவர் உறுப்பி னராக (பிரிஸில்லா பாண்டியன்) தேர்வாகியுள்ளார். இதில் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் 9 பேருக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. 25 பேரில் 13 பேரின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களே தலைவராக முடியும்.
இந்த தேர்தல் எம்பி, எம்எல்ஏ மற்றும் இடைத்தேர்தல் ஃபார் முலாக்களையே மிஞ்சிவிட்டது எனும் அளவுக்கு சென்றதால், இந்த தேர்தலை வருமான வரித் துறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என உயர் நீதிமன்றமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு கோடி கோடியாக பணம் புழங்கும் தேர்தலாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வான சிலர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை: பார் கவுன்சில் தலை வர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகம் வெல்ல வேண்டும். பணநாயகம் வென்று விடக்கூடாது. ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
பார் கவுன்சிலை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நேரமிது. நேர்மையான, நியாயமான முறையில் வழக்கறிஞர்களின் நலனுக்காக உண்மையாக பாடு படக்கூடியவர்கள் தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும். தற்போது தேர்வாகியுள்ள 25 பேரில் 13 பேர் புதுமுகங்கள். மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். எனவே நல்லது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைய உள்ளது.
வழக்கறிஞர் கே.பாலு: சமீப காலமாக பார் கவுன்சில் என்பது கோடிகளில் பணம் புரளும் வியா பார வணிக மையமாக மாறிவிட்டது. அதன் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியும் விமர்சனங்களும் உள்ளன. எனவே பணத்தைக் கொண்டு தீர்மானிக்காத, அதி காரத்தொனி இல்லாத நல்ல சூழல் பார் கவுன்சிலில் உருவாக வேண்டும். வழக்கறிஞர்களின் நலன், பார் கவுன்சிலின் கண்ணியம் மற்றும் பாரம்பரியம், பெருமை காக்கப்பட வேண்டும். பணம் மட்டுமே எதிர்கால பார் கவுன்சில் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது. தீர்மானிக்கவும் விடமாட்டோம்.
வழக்கறிஞர் எம்.வேல் முருகன்: தலைவர் பதவிக்கு 25 பேரில் 9 பேருக்கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பார் கவுன்சில் தேர்தல் நடவடிக்கைகளை உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. இந்த தேர்தலை நீதிபதி கள் ஏற்கெனவே கடுமையாக விமர்சித்துள்ளனர். நம்மை நம்பி ஓட்டுப்போட்ட வழக்கறிஞர்களை நாம் அடகு வைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். வழக்கறிஞர்கள் நலனுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பணப்பேரமற்ற வெளிப்படைத் தன்மையுடன் இந்த தேர்தல் நடை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
திரைமறைவில் குதிரை பேரம்
வழக்கறிஞர் எம்.புருஷோத்த மன் கூறும்போது, ‘‘பி.வி.ராஜமன் னார், வி.கே.திருவேங்கடாச்சாரி, கே.எஸ்.நாயுடு, கே.பராசரன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.மார்க்கபந்து போன்ற பல ஜாம்பவான்கள் பார் கவுன்சில் தலைவராக பதவி வகித்து சேவை மனப்பான்மையுடன் நல்லது செய்துள்ளனர்.
ஆனால் இன்று கோடிகளில் பேரம் நடக்கிறது என்றால் எங்களைப் போன்ற ஓட்டுப்போட்ட வழக்கறிஞர்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு வெளிநாடு இன்பச்சுற்றுலா, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரொக்கப் பணம் என குதிரை பேரத்தை திரை மறைவில் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதைத்தாண்டி இந்த முறை அதிமுக, திமுக, பாமக என பல்வேறு அரசியல் கட்சியினரும் பார் கவுன்சில் தலைவர் பதவியை தங்களது வசமாக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்த தேர்தலுக்காக பார் கவுன்சில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொகை யில் நலிவடைந்த இளம் வழக் கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை, இலவசமாக சட்டநூல்கள் வழங்கி யிருக்கலாம். நவீன யுகத்தில் ஒரு தேர்தலுக்காக 5 மாதமாக வாக்கு எண்ணிக்கை என்பது இங்கு மட்டும் தான் சாத்தியம். தலைவர் பதவிக்காக கோடி கோடியாக செலவு செய்கின்றனர் என்றால் பார் கவுன்சில் மூலமாக அவர்களுக்கு வருமானம் கொட்டுகிறதா?
சாதிய ரீதியிலான கட்டப் பஞ்சாயத்து நடவடிக்கை களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு நேரடித் தேர்தலை நடத்திவிட்டால் இந்த குதிரை பேரத்துக்கே வேலை இருக் காது.
அதேபோல வழக்கறி ஞர்களின் ஸ்டாம்ப் மூலமாக வசூலாகும் பணத்துக்கும் வெளிப்படையான கணக்குகளை அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT