Published : 09 Sep 2018 09:51 AM
Last Updated : 09 Sep 2018 09:51 AM
தமிழக மீன்வளத் துறை சார்பில் தூத்துக்குடி, குளச்சல், தேங்காய்ப் பட்டினம், சின்னமுட்டம் ஆகிய 4 துறைமுகங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் மீனவர்களுக்கான கூட்டு றவு பண்டக சாலை ஒரு மாதத் துக்குள் திறக்கப்பட உள்ளது.
பாரம்பரிய மீனவர்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு தொடங்கியது. இந் நிறுவனம் மூலம் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பில் மீனவர்களுக்கான கூட்டு றவு பண்டக சாலை திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை உயர் அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு இணையத்தின் கீழ், 850 தொடக்கநிலை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம், மீனவர்களின் மீன்பிடி தொழிலுக் குத் தேவையான உதவிகள், மானிய விலையில் டீசல், மண்ணெண்ணை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அத் துடன், மீனவர்களுக்கு மீன்களை பதப்படுத்தி மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க பயிற்சி கள் மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கவும் பயிற்சிகள் அளிக் கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது 9 பெரிய துறைமுகங்கள் உள்ளன. மேலும், 5,900 விசைப்படகுகளும், 39 ஆயி ரம் நாட்டுப் படகுகளும் உள் ளன. மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்ப 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகிறது. இதனால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மீன்பிடி வலைகள், டீசல், ஐஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். இந்தப் பொருட்களை ஒவ்வொரு இடமாக தேடிச் சென்று வாங்க வேண்டி உள்ளது. இதனால், அவர்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், துறைமுக வளாகத்திலேயே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக் கும் வகையில் மீனவர்களுக்கான கூட்டுறவு பண்டக சாலை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தூத்துக்குடி, குளச்சல், தேங்காய்ப்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய 4 துறை முகங்களில் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்துக்குள் பண் டக சாலை திறக்கப்பட உள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல் லும்போது கடலில் சமைத்து சாப் பிடுவதற்குத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், காய்கறிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள், மீன்பிடி வலைகள், நடுக் கடலில் படகு இயந்திரத்தில் ஏதே னும் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்குத் தேவையான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல் வேறு பொருட்கள் இந்த பண்டக சாலையில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப் படும். இதன்மூலம், மீனவர்களுக்கு லாபம் கிடைப்பதோடு, அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
அடுத்தகட்டமாக, சென்னை ராயபுரம், நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் இதுபோன்ற பண்டக சாலை விரைவில் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT