Published : 20 Sep 2018 09:59 AM
Last Updated : 20 Sep 2018 09:59 AM

750-வது அவதார ஆண்டு நிறைவு விழா கோலாகலம்: மயிலை ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு இன்று திவ்யதேச மரியாதை; தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத் தில் அவரது 750-வது திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு இன்று அவருக்கு சுமார் 80 திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான தலங்களில் இருந்து எம்பெருமான்களின் பிரசா தங்களை (மாலை, பரிவட்டம் ஆகி யவை) அனுக்ரஹமாக அருள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

மயிலாப்பூர் ஸ்ரீ கேசவ பெரு மாள் சன்னதி தெருவில் அமைந் துள்ளது ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம். இங்கு அமைந் துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ வேதாந்த தேசி கருக்கு தனி சன்னதி உண்டு. சுவாமி தேசிகரின் 750-வது திரு அவதார ஆண்டு நிறைவு விழா வின் ஒரு பகுதியாக சுவாமி தேசி கருக்கு இன்று சுமார் 80 திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான தலங் களில் இருந்து எம்பெருமான் பிரசா தங்களை அனுக்ரஹமாக அருள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

தேசிகருக்கு அனுக்ரஹம்

வேத கோஷம், குடை அலங் கார அணிவகுப்பு, வாத்தியங்க ளுடன் பக்தர்கள் புடை சூழ, பல திவ்ய தேசங்களில் இருந்து எழுந் தருளவிருக்கும் அர்ச்சக ஸ்வாமி கள் மயிலாப்பூர் வேங்கடேச அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ தேசிக பவனத்தில் இருந்து பிரசாதங்களை எழுந்தருள செய்துக்கொண்டு மாடவீதிகளில் வலம் வந்து, தேவஸ்தானத்துக்கு எழுந்தருளி, ஆச்சார்ய ஸார்வபௌமரான வேதாந்த தேசிகருக்கு அனுக்ரஹம் செய்யப்படும்.

இதுகுறித்து ஸ்ரீ வேதாந்த தேசி கர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி (டிரஸ்டி) ஆர்.முகுந்தன் நேற்று கூறியதாவது:

சுவாமி தேசிகரின் 750-வது திரு அவதார ஆண்டு நிறைவு விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின் றன. கல்யாணபுரம் ஆராவமுதன், கருணாகராசாரியார், அனந்த பத்மநாப சுவாமி, தாமல் ராம கிருஷ்ணன், நாராயணசார் போன் றோர் உபன்யாசம் நிகழ்த்தினர்.

தினமும் சுவாமி தேசிகருக்கு விதவிதமான அலங்காரம் (நாச்சி யார் திருக்கோலம், பரமபதநாதன், வேணுகோபாலன், காளிங்க நர்த் தனம், வெண்ணைத்தாழி கண்ணன், முரளி கண்ணன், அட்சர அப்யாச திருக்கோலங்கள்) செய்து யாளி, சிம்மம், யானை, குதிரை, ஹம்ஸ வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகின்றன.

அசிதி பாராயணம்

5 நாட்களுக்கு அசிதி (கிருஷ்ண யஜுர் வேதம்) பாராயணம் நடை பெற்றது. சுவாமி தேசிகருக்கு 108 கலச திருமஞ்சனம், பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு சஹஸ் ரநாம அர்ச்சனை, சஹஸ்ர தீபங் கள் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

மகா உற்சவத்தின் 9-ம் நாளான வியாழக்கிழமை காலை 7-30 மணிக்கு திருத்தேரில் சுவாமி தேசி கர் வீதியுலா வருவார். மாலை 5 மணிக்கு சுவாமி தேசிகருக்கு திவ்ய தேச மரியாதை செய்யப்படும். இரவு 8 மணிக்கு தங்க கேடயம் நிகழ்வு நடைபெறும்.

10-ம் நாள் (வெள்ளிக்கிழமை) உற்சவத்தன்று (சுவாமி தேசிகரின் திருநட்சத்திரம் - திருவோணம்) மங்களாசாஸனம், பலாத்தோப்பு எழுந்தருளல், மூலவர் திருமஞ் சனம், பத்தி உலாத்தல், ஒய்யாளி, திருப்பாவை சாற்றுமுறை, மங்கள கிரி புறப்பாடு, திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெறும். செப். 22-ம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

மேலும், இந்த வருடம் சித்திரை மாதம் (ஏப்ரல் 2018) முதல் ‘தேசிக ஸந்தேஷம்’ என்ற மாதாந்திர பத்திரிகை தொடங்கியுள்ளோம். புதிதாக தேசிகர் நூலகம் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x