Published : 23 Sep 2018 09:53 AM
Last Updated : 23 Sep 2018 09:53 AM
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்து வமனைஅமைக்க மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை நிறை வேற்ற தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் இத்திட் டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என 2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதை எந்த இடத்தில் அமைப்பது என்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தமிழக அரசு தஞ்சை செங்கிப் பட்டியில் அமைக்கவும், கட்ட மைப்பு வசதிகள் அடிப்படையில் மத்திய அரசு மதுரையில் அமைக் கவும் ஆர்வம் காட்டின. இதனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைவது கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக தள்ளிப்போனது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத் துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வலியுறுத்தி உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந் தார். அப்போதுகூட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தாமதம் ஏற்பட மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் பழி சுமத்துவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை உடனே அறிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நெருக்கடி கொடுத்தது.
மத்திய அரசு அறிவிப்பு
இதையடுத்து, மதுரை தோப் பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதேநாளில் முதல்வர் பழனிசாமியும் மதுரையில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதாக அறிவித்தார்.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைவதாக அறிவிக்கப் பட்ட மதுரை தோப்பூரில் இது வரை மண் ஆய்வு மட்டுமே நடத்தப் பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க மத்திய அரசு 5 நிபந்தனைகள் விதித்தது. அவற்றை தமிழக அரசு நிறைவேற்றிக் கொடுத் தால்தான் இத்திட்டத்தில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள் ளது. ஆனால், தற்போது நிபந் தனைகளை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசாணை இல்லை
அதேசமயம் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை அர சாணை வெளியிடவில்லை. மக்க ளவைத் தேர்தல் நெருங்கும் நிலை யில் தேர்தலுக்குப் பிறகு மத்தி யில் ஆட்சி மாற்றம் ஏற்பட் டால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறிய தாவது:
மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவ மனையை மதுரை தோப்பூரில் அமைக்க கொள்கை முடிவை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது. அதில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மாநில அரசு செய்ய வேண்டிய விஷயங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது 200 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமை யும் இடத்தில், நான்குவழிச் சாலை அமைத்து, தேசிய நெடுஞ்சாலை யுடன் இணைக்கும் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும். 20 மெகாவாட் மின் வசதி, இரண்டு வழித்தடங்கள் வாயிலாக வழங்க வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். போதிய குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.
தோப்பூரில், எண்ணெய்க் குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், மருத்துவ மனை கட்டுமானம் குறித்து ஒப்பந் தம் மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸுக்காக கையகப்படுத்தப் பட்ட நிலத்தை மத்திய அரசுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை நிறை வேற்றிக் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசு அரசாணை வெளி யிடும்.மாநில அரசு அதை செய்து கொடுக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதாலே எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அரசாணை வெளியிடு வதிலும், இந்த திட்டத்தை தொடங்கு வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்பது புரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, தோப்பூரில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது. இணைப்புச் சாலை அமைக்க ஆய்வுகள் முடிந்துவிட்டன. நீர் ஆதாரம் உள்ளிட்ட பணிகள் ஆய்வில் உள்ளன என்றனர்.எய்ம்ஸ் மருத்துவ மனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு கொள்கை முடிவை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT