Published : 18 Sep 2018 09:23 AM
Last Updated : 18 Sep 2018 09:23 AM
கும்பகோணம் அருகே சந்திரம்கருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மைகள். படம்: வி.சுந்தர்ராஜ்
நவராத்திரி விழா அக்டோபர் 8-ம் தேதி தொடங்க வுள்ளதை அடுத்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கும்பகோணம் அடுத்த சத்திரம் கருப்பூரில் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
மக்களைக் கொன்று குவித்து நாட்டை துவம்சம் செய்து வந்த 3 அசுரர்களை பார்வதிதேவி காளி யாகவும், மகாலெட்சுமி விஷ்ணு துர்க்கையாகவும், மகாசரஸ்வதி நிசம்பசூதனியாகவும் உரு வெடுத்து 9 நாட்களில் வதம் செய்து உலகை காப்பாற்றியதாக ஐதீகம்.
இந்த 9 நாட்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படு கிறது. மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜையன்று நிறைவு பெறும்.
இந்த நவராத்திரி விழாக்காலத் தில் அம்மன் தெய்வங்கள், பக்தர் களின் இல்லத்துக்கே வந்து அருள்பாலிப்பதாகக் கூறப்படு கிறது. இதையொட்டி இல்லங்கள் தோறும் நவராத்திரி கொலு அமைத்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
அக்.8-ம் தேதி நவராத்திரி தொடங்க உள்ளதால் கொலுவை அலங்கரிக்கத் தேவையான பொம்மைகள் தயாரிப்பும், விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த சத்திரம்கருப் பூரில் ஆண்டு முழுவதும் கொலு பொம்மைகள் தயாரிப்பு பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின் றனர். அவர்களில் ஒருவரான பாக்கியலட்சுமி என்பவர் கூறியது:
ஆண்டின் தொடக்கத்திலேயே எங்களுக்கு பொம்மைகள் வேண் டும் என வியாபாரிகள், கோயில்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஆர்டர்கள் வந்துவிடுவதால் நாங்கள் ஆண்டு முழுவதும் கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நவராத்திரி தொடங்க உள்ளதால் தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக சுவாமி சிலை களுடன் ஆடு, மாடு, குதிரை, யானை போன்ற விலங்குகள், பறவை கள், இசைக்கருவிகள், வாகனங் கள், காய்கள், பழங்கள் உள்ளிட்ட பொம்மைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
முழுவதும் காகிதக் கூழால் பொம்மைகளை செய்வதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். கண்ணைக் கவரும் பல வண்ணங்கள் தீட்டப்பட்டு இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ரூ.20 முதல் ரூ.5 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT