Published : 21 Sep 2018 10:00 AM
Last Updated : 21 Sep 2018 10:00 AM
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அவரது 750-வது திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு இன்று அவருக்கு 80 திவ்ய தேசங்கள் மற்றும் அபிமானத் தலங்களில் இருந்து எம்பெருமான்களின் பிரசாதங்கள் (மாலை, பரிவட்டம் ஆகியவை) அனுக்ரஹமாக அருளப்பட்டன.
சுவாமி தேசிகரின் 750-வது திருஅவதார ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக சுவாமி தேசிகருக்கு இன்று 80 திவ்ய தேசங்கள் மற்றும் அபிமானத் தலங்களில் இருந்து எம்பெருமான்களின் பிரசாதங்கள் அனுக்ரஹமாக அருளப்பட்டன.
வேத கோஷம், குடை அலங்கார அணிவகுப்பு வாத்தியங்களுடன் பக்தர்கள் புடை சூழ, பல திவ்ய தேசங்களில் இருந்து வந்த அர்ச்சக ஸ்வாமிகள் மயிலாப்பூர் வேங்கடேச அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ தேசிக பவனத்தில் இருந்து பிரசாதங்களை எழுந்தருள செய்துக்கொண்டு மாடவீதிகளில் வலம் வந்து, தேவஸ்தானத்துக்கு எழுந்தருளி, ஆச்சார்ய ஸார்வ பௌமரான வேதாந்த தேசிகருக்கு அனுக்ரஹம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி (டிரஸ்டி) ஆர்.முகுந்தன் நேற்று கூறியதாவது:
சுவாமி தேசிகரின் 750-வது திருஅவதார ஆண்டு நிறைவு விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மகா உற்சவத்தின் 9-ம் நாளான வியாழக்கிழமை காலை 7-30 மணிக்கு திருத்தேரில் சுவாமி தேசிகர் வீதியுலா வந்தார். மாலை, சுவாமி தேசிகருக்கு 80 திவ்ய தேசங்கள் மற்றும் அபிமானத் தலங்களில் இருந்து எம்பெருமான்களின் பிரசாதங்கள் அனுக்ரஹமாக அருளப்பட்டன. முதலில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்ரீ நிவாஸ பெருமாளின் பிரசாதம் (மாலை, பரிவட்டம்) சுவாமி தேசிகருக்கு அருளப்பட்டது.
பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளின் பிரசாதம் சுவாமி தேசிகருக்கு அருளப்பட்டது. இவ் வாறாக ஒவ்வொரு திவ்ய தேசம் மற்றும் அபிமானத் தலங்களின் பிரசாதங்கள் சுவாமி தேசிகருக்கு அருளப்பட்டு அனுக்ரஹம் செய்யப் பட்டது. இரவு தங்க கேடயத்தில் சுவாமி தேசிகர் வீதியுலா நடை பெற்றது.
10-ம் நாள் (வெள்ளிக்கிழமை) உற்சவத்தன்று (சுவாமி தேசி கரின் திருநட்சத்திரம் - திருவோணம்) மங்களாசாஸனம், பலாத்தோப்பு எழுந்தருளல், மூல வர் திருமஞ்சனம், பத்தி உலாத் தல், ஒய்யாளி, திருப்பாவை சாற்று முறை, மங்களகிரி புறப்பாடு, திரு வாய்மொழி சாற்றுமுறை நடை பெறும். 22-ம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT