Published : 24 Sep 2018 09:15 AM
Last Updated : 24 Sep 2018 09:15 AM

மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் அதிகாரி விளக்கம் கொடுத்தாலே புகார்கள் முடித்துவைப்பு: பிரச்சினை தீராததால் பொதுமக்கள் குழப்பம்

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ என்ற ஸ்மார்ட் கைபேசி செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தாலே, அந்த புகார் மீது தீர்வு காணப்பட்டதாகக் கருதி, முடித்து வைக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள், தங்கள் புகார்களுக்குத் தீர்வு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஜனவரி மாதம் 'நம்ம சென்னை' என்ற ஸ்மார்ட் கைபேசி செயலி வெளியிடப்பட்டது. இந்தச் செயலியில், உடனே தீர்க்க முடியாத பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தால், “அதை சீரமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்க்கப்படும்” என்று அதிகாரிகள் பதில் அளித்து, புகாரை முடித்து வைத்து விடுகின்றனர். புகார்கள் முடித்து வைக்கப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம், 'நம்ம சென்னை' செயலி மூலம் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக தீர்வுகண்டு வருவதாகத் தெரிவிக்கிறது.

புகாரை மீண்டும் திறக்கலாம்

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயன் கூறும்போது, “சில புகார்களைத் தீர்க்க, டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதுவரை புகாரை திறந்துவைத்திருக்க முடியாது. அவ்வாறு முடிக்கப்பட்ட புகார்கள் குறித்து சில மாதங்களுக்குப் பிறகு தீர்க்கப்படாவிட்டால், அதை திறந்து மறு புகார் செய்யும் வசதி உள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார்.

மறு புகார் செய்வது தொடர் பான விதிகள் குறித்து மாநகராட் சியின் தொழில்நுட்ப அதிகாரிகள் கூறும்போது, “ஒரு புகாரை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையர் முடித்து வைத்திருந் தால், அதை திறந்து புகார்தாரர் மறுபுகார் அளிக்க முடியாது.

ஒரு புகாருக்கு விளக்கம் அளித்து மூடும்போது, அது குறித்து புகார்தாரருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதன் பிறகு புகார்தாரருக்கு ஆட்சே பனை இருந்தால் 24 மணி நேரத்துக்குள், ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரை திறந்து மறுபுகார் அளிக்கலாம்” என்றனர்.

அவகாசம் நீட்டிக்க வேண்டும்

இது தொடர்பாக மாநகராட்சி யின் செயலியை பயன்படுத்தும் பொதுமக்கள் கூறும்போது, “செயலியில் ‘எனது புகார்’ என்ற பக்கத்தில், மீண்டும் புகாரைத் திறக்கும் வகையில் பழைய புகார்கள் பட்டியல், பல கைபேசி மாடல்களில் இருப்பதில்லை. இதனால் மறு புகார் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மறு புகார் அளிப்பது தொடர்பான விதிகள் பயன்பாட்டுக்கு உகந் ததாக இல்லை. எப்போது வேண்டு மானாலும் திறந்து மறு புகார் அளிக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும்” என்றனர்.

தமிழ் யுனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் இந்த செயலியில் தமிழ் யுனிகோடில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளால் படிக்க முடியவில்லை. பல அதிகாரிகளுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், ஆங் கிலத்தில் பதில் அளிக்கும் போது எதிர்கால வாக்கியத்துக்கு பதிலாக, இறந்தகால வாக்கியத்தில், பணிகள் முடிக்கப் பட்டது என்ற பொருளில் பதில் அளித்துவிடுகின்றனர்.

தமிழ் யுனிகோடு

எனவே அதிகாரிகள் அனைவரும் தமிழில் பதில் அளிக்கவும், பயனாளிகள் தமிழில் புகார் தெரிவிக்கவும், இந்த செயலியை தமிழ் யுனிகோடுக்கு உகந்ததாகவும் மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக் கையாக உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தமிழ் யுனிகோடு எழுத்துரு பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பிரச்சினை தீர்க்கப்படும். மறு புகார் அளிப்பதற்கான அவகாசமும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x