Published : 24 Sep 2018 09:28 AM
Last Updated : 24 Sep 2018 09:28 AM
கந்தசாமி கோயிலில் ஆன்மிக நூலகம் அமைப்பதற்காக பக்தர்கள் 700-க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ள நிலையில், 2 ஆண்டுகளாக தாமத மாகி வரும் நூலகப் பணிகளை துரிதப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூரில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கந்த சாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர் கள் ஏராளமானோர் வந்துசெல் கின்றனர். கோயிலில் சுவாமி தரிச னத்துக்காக காத்திருக்கும் பக்தர் களிடம், புத்தக வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்துவதற்காக கோயில் வளாகத்தில் உள்ள கலை யரங்கத்தில் ஆன்மிக நூலகம் அமைக்க கந்தசாமி கோயில் நிர்வா கம் கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்தது.
நூலகத்துக்காக ஆன்மிக நூல்களை நன்கொடையாக வழங்கும்படி கோயில் நிர் வாகம் கேட்டுக்கொண்டது. இதை யடுத்து, இந்து சமயம் சார்ந்த நூல்கள் மற்றும் பக்தி கதை புத்தகங்கள், ஸ்லோக புத்தகம், மகான்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், சித்தர்கள் இயற்றிய பக்திப் பாடல்கள் அடங்கிய புத்த கம், தமிழ் இலக்கிய நூல்கள், சைவ மற்றும் வைணவ நூல்கள், புராணங்கள், இதிகாசங் கள் தொடர்பான பல்வேறு ஆன்மிக புத்தகங்களை பக்தர்கள் வழங்கி னர். இதன்மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடை யாகக் கிடைத்தன.
ஆன்மிக நூலகம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் நூலகம் அமைக்கப்படாமல் உள்ளது. பக்தர்கள் வழங்கிய புத்த கங்கள் நூலகத்துக்காக காத் திருப்பதால், பணிகளை துரிதப் படுத்தி நூலகத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் பக்தர்கள் கூறும்போது, ‘‘கோயிலில் ஆன்மிக நூலகம் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானதும், பல்வேறு ஆன்மிக புத்தகங்கள் ஒரே இடத் தில் கிடைக்கும் என்றும், கோயி லுக்கு வரும் சிறுவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்றும் கருதினோம். ஆனால், பக்தர்களின் மூலம் 400, கோயில் நிர்வாகம் மூலம் 300 என 700 புத்தகங்கள் கிடைத்துள்ள நிலை யில், 2 ஆண்டுகளாக நூலகம் அமைக்கப்படாமல் உள்ளதால், புத்தகங்கள் மூட்டைகளில் தூங்கு கின்றன. மேலும், உள்ளூர் பக்தர் களான நாங்களும் ஏமாற்றமடைந்து வருகிறோம். எனவே, அறநிலை யத் துறை நூலகம் அமைப்ப தற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
‘‘ஆன்மிக நூலகம் அமைப்ப தற்கான பணிகள் சில நிர்வாகக் காரணங்களால் தாமத மடைந்தன. தற்போது, பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நூலகத்திற்காக வழங்கப் பட்ட புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. விரைவில் நூலகம் திறக்கப்படும்'’ என்று கந்தசாமி கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT