Published : 28 Sep 2018 07:57 AM
Last Updated : 28 Sep 2018 07:57 AM

மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டதால் வாரிசு அடிப்படையில் இனி பணி நியமனம் இல்லை: ரயில்வே வாரியம் திட்டவட்டம்

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, ரயில்வேயில் வாரிசு அடிப்படையில் இனி பணி நியமனம் வழங்குவ தில்லை என அனைத்து மண்டலங் களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வேயில் சம்பளத்தோடு பல்வேறு சலுகைகளும் கிடைப்ப தோடு மட்டுமல்லாமல், பணியில் இருக்கும்போது தங்களது வாரிசு களுக்கு வேலை வாங்கி தர முடியும். இதனால், இத்துறையில் பணிக்கு சேர கடும் போட்டி உள்ளது. ரயில்வே துறையில் இன்ஜினீயரிங் பிரிவு காங்கி தொழிலாளர்கள், போக்குவரத்து பிரிவு போர்ட்டர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், மின்பாதையில் பணியாற் றும் கலாசிகள், உதவி ரயில் ஓட்டுநர்கள் போன்ற பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் வாரிசு அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு ரயில்வே யில் வேலை பெற்று வந்தார்கள்.

7-வது ஊதியக்குழு நிபந்தனை

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த 7-வது ஊதியக்குழு ஊதிய விகிதப்படி ஊழியர்கள் நிலை ஒன்றில் இருந்தால் 20 ஆண்டுகள் பணி முடித்து 50 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும், அல்லது நிலை இரண்டில் இருந் தால் 33 ஆண்டுகள் பணிமுடித்து 55 மற்றும் 57 வயதுக்கு இடைப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் இத்திட்டம் 2004-ம் ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டு படிப்படியாக விரிவு படுத்தப்பட்டது.

இதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை விண்ணப்பங்கள் பரிசீலிப் பது வழக்கமாக இருந்து வந்தது. இதனால், ஆண்டுதோறும் சுமார் 6,000 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதற் கிடையே, கடந்த ஆண்டு அக் டோபர் மாதத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் நீதிமன்றம், வேலை வாய்ப்பு பொதுவானது. அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டுமென கூறி, வாரிசு அடிப்படையில் பணி நியமன முறையை ரத்து செய்தது.

இதையடுத்து, ரயில்வே வாரி யம் இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதன்பிறகு, கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை பெற்று ரயில்வே வாரியம் இத்திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து விட்டது.

இதற்கான உத்தரவை ரயில்வே வாரிய இணை இயக்குநர் என்.பி. சிங் பிறப்பித்து அனைத்து மண்டல பொதுமேலாளர்களுக்கும் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோ கரன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் கடைநிலை பணியாளர்கள் பணிக்கு உடல் வலிமை முக்கியமானதாகும். வயது முதிர்ந்த ஊழியர்களை விட இளம் வாரிசுகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பதை நோக்கமாக கொண்டு வாரிசு அடிப் படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், 20, 30 ஆண் டுகள் பணியில் இருப்பவர்களை விட, புதியதாக பணியில் சேரும் இளம் ஊழியர்களுக்கு சம்பளமும் குறைவுதான்.

மேல்முறையீடு செய்ய வேண்டும்

இத்திட்டத்தால் ரயில்வே ஊழி யர்களுக்கு மட்டுமல்ல, ரயில்வே நிர்வாகத்துக்கும் மிகவும் பயனுள் ளதாக இருக்கும். எனவே, தனி நபர் வழக்கின் தீர்ப்பின் அடிப் படையில் இத்திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. ரயில்வே வாரிசு வேலை திட்டம் ரத்து செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் வாரியம் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வேயில் கலாசி, டிராக்மேன் போன்ற கடை நிலை ஊழியர்களின் பணி கடினமானது. தினமும் சுமார் 5 கி.மீ தூரம் நடக்க வேண்டும். ரயில் தண்டவாளங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த கடைநிலை பிரிவில் பணியாற்று வோர் 50 வயதைக் கடக்கும்போது, அந்தப் பணியை அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கருணை அடிப்படையில் பணி

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த முறையை ரத்து செய்ய உத்தர விட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் பாதிப்பு இருக் காது. குறிப்பாக, ரயில்வே ஊழியர் கள் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர்களது வாரிசுதாரர் களுக்கு பணி வழங்கப்படும். மேலும், ஏற்கெனவே, வாரிசு அடிப் படையில் பணிகோரி கடந்த ஆண் டில் நேர்காணலில் கலந்து கொண் டவர்களுக்கும் பணி வழங்கு வதில் பாதிப்பு இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x