Published : 18 Sep 2018 09:44 AM
Last Updated : 18 Sep 2018 09:44 AM
சீனப் பட்டாசுகளின் இறக்குமதி, நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஆகிய காரணங்களால் தொழிலைத் தொடர முடியாமலும், ஆர்டர்கள் இல்லாததாலும் சிவகாசி பட்டாசுத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 178 பட்டாசு ஆலைகள், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 230 பட்டாசு ஆலை கள், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 450 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 850-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் 2 லட்சத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு ஆலைகளின் உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில் சார்ந் தோர், வாகனப் போக்குவரத்து, சுமைப் பணித் தொழிலாளர்கள், வெடிபொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவீத தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், அவ்வப்போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளால் பட்டாசுத் தொழிலும், தொழிலாளர் களின் நிலையும் கேள்விக்குறியாகி வருகிறது.
பட்டாசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ல் பொதுநலன் வழக்குத் தொடரப் பட்டது. அதில், டெல்லி தேசிய தலைநகரப் பகுதியில் ஏற்பட்ட புகை மாசுக்குப் பட்டாசு புகைதான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.
அதையடுத்து, 11.11.2016 முதல் டெல்லியில் பட்டாசு விற்பனைக் கும், பயன்பாட்டுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. இத னால் டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்கப் படவில்லை. தீபாவளி முடிந்த பின் 1.11.2017-க்குப் பிறகு பட்டாசு விற்கலாம் எனவும் அந்த ஆணையில் நீதிபதி கூறியிருந்தார். எனவே, டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கான தடை 1.11.2017 முதல் நீங்கியது.
ஆனால், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்குத் தடை கோரி அதே மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆர்டர்கள் குறைந்தன
இந்த வழக்கு காரணமாக பட்டாசு ஆலைகளுக்கு வழக்க மாக கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. தங்கள் வாழ் வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் டிச. 26-ம் தேதி முதல் காலவரையின்றி ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தத் தீர்வும் எட்டப் படாததால் 27 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
வழக்கை காரணம் காட்டி, பட்டாசுக்கான ஆர்டர்கள் குறைந்து விட்ட அதே நேரத்தில், ஆன்லைன் விற்பனை மூலம் சீனப் பட்டாசுகள் வரவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சிவ காசி பட்டாசுத் தொழில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தி யாளர்கள் சங்கச் செயலரும் அனைத்திந்திய பட்டாசு சங்கங் களின் கூட்டமைப்பு சம்மேளனத் தின் கூடுதல் பொதுச் செயலருமான மாரியப்பன் கூறியதாவது:
பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை யில் உள்ளதால், வடமாநிலங்களில் தீபாவளிக்காக பட்டாசுக் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருமோ என்ற அச்சத்தால் வியாபாரிகள் ஆர்டர் கொடுக்கத் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இதனால், பட்டாசு உற்பத்தி 50 சதவீதம் குறைந்துவிட்டது. வங்கிக் கடன் பெற்று தொழிலில் ஈடுபட்டு வரும் பலர், எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைத்தால் மட்டுமே பட்டாசு உற்பத்தி அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT