Published : 01 Sep 2018 10:36 AM
Last Updated : 01 Sep 2018 10:36 AM

நகர்ப்புறங்களை அச்சுறுத்தும் ‘சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை’; மாநகராட்சி எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதா?- சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் விளக்கம்

நகர்ப்புறங்களை ‘சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை’ அச்சுறுத்தி வருவதால், அத்தகைய பேரிடரை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் விளக்கமளித் துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, தமிழக மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சமாக உள்ளது. இதில் நகர்ப்புறங்களில் வசிப்போர் மட்டுமே 3 கோடியே 50 லட்சமாக (48.44 சதவீதம்) உள்ளனர். இந்தியாவில் நகரமயமான மாநிலங் களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை 27 சதவீதம் அதிகரித் துள்ளது. கிராமப்புற மக்கள் தொகை 6% மட்டுமே அதிகரித்துள்ளது.

அறிவியல்பூர்வ காரணம்

அண்மைக் காலமாக நகர்ப் புறங்களை ‘சில மணி நேரத் தில் கொட்டித் தீர்க்கும் கனமழை’ அச்சுறுத்தி வருகிறது. இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் ஒரே நாளில் 24 செமீ மழை பதிவானது. தாம்பரத்தில் 49 செமீ பதிவானது. கடந்த ஆண்டு டிசம்பரில் சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை டிஜிபி அலுவலகத்தில் (மயிலாப்பூர்) அதிகபட்சமாக 30 செமீ மழை பதிவானது. இது போன்று ‘சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை’ நிகழ்வை வானிலை ஆய்வு மையத்தாலேயே கணிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டங்களில் சென்னை யில் பெருவெள்ளம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் பொருட் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.

இதே போன்று பெங்களூரு, மும்பை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நகர் ஆகிய நகரங்களிலும் முந்தைய ஆண்டுகளில் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட் டுள்ளது. இந்த ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரிலும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலும் கனமழை பெய்து வரு கிறது. கடந்த மாதம் ஒரே நாளில் வால்பாறையில் 31 செமீ, சின்ன கள்ளாரில் 26 செமீ மழை பதிவாகி யுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் 4 செமீ மழை பெய்தது. இந்த மழைக்கே, சூளையில் உள்ள தமிழ் நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி, ஐஸ் ஹவுஸ் போன்ற பல சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், பல்வேறு நகரங்களை அச்சுறுத்தி வரும் ‘சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை’ போன்ற நிகழ்வை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதா என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

விரிவான திட்ட அறிக்கை

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு, அதுபோன்ற வெள்ளத்தைத் தடுப் பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிதியைக் கொண்டு அனைத்து வார்டுகளுக்கும் புதிய ஜெனரேட்டர்கள், நீர் இரைக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மரங்கள் விழுந்தால், அவற்றை அகற்றுவதற்கான இயந்திரங்களும் வாங்கப்பட் டுள்ளன. பல இடங் களில் மழை நீர் வடிகால்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. அவற்றுக் கிடையே இணைப்புகள் இல்லாதது கண்டறியப்பட்டு, நீர் வழிந்தோ டும் விதமாக இணைப்பு களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குளங்கள் சீரமைப்பு

மாநகரப் பகுதியில் உள்ள 206 நீர்நிலைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஆழப்படுத்தி, நீர் கொள்திறனை அதிகரித்து புனரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான வரத்து கால்வாய் களும் சீரமைக்கப்பட்டு வருகின் றன. நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்களும் சீரமைக்கப் பட்டு வருகின்றன.

பெருமளவு வெள்ள நீர் இந்த நீர்நிலைகளுக்குச் சென்றுவிடும். சாலைப் பணியாளர்களுக்கு காலை 8 மணிக்கு பணி நேரம் தொடங்கினாலும், இரவு அதிக மழை பெய்தால், அடுத்த நாள் காலை 6.30 மணிக்கே பணிக்கு வந்துவிட வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட் டுள்ளது.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, வெள்ளத்தை எதிர்கொள்ள பல் வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, பெருமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x