

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளதற்கு ஆதாரம் வெளியாகியுள்ளதால் அவர் மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
‘‘பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடாவடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
காணொளி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன. தமிழகத்தின் அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.