Published : 27 Sep 2018 10:32 AM
Last Updated : 27 Sep 2018 10:32 AM
தமிழ்நாட்டில் அணைகள், தடுப் பணைகளை எளிதாக கட்டிவிட இயலாது. இயற்கையாக அமைந் துள்ள நில அமைப்பின் காரண மாக, தடுப்பணைகள் கட்டினாலும் குறைந்த அளவே நீரைத் தேக்கி வைக்க இயலும் என்கிறார் பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவர்.
தமிழ்நாட்டில் வற்றாத ஜீவ நதி யான தாமிரபரணி,சொந்த மாநிலத் துக்குள்ளேயே உற்பத்தியாகி கடலில் கலக்கிறது. காவிரி கர் நாடகாவில் உற்பத்தியாகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத் தில் காவிரியிலும் தாமிரபரணி யிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஏராளமான தண்ணீர் கட லில் கலக்கிறது. அண்மையில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால், மேட்டூர் அணை யில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட சுமார் 100 டிஎம்சி உபரிநீர் கடலில் கலந்துள்ளது. காவிரியின் குறுக்கே தடுப்பணை கள் கட்டியிருந்தால் இவ்வளவு தண்ணீர் கடலில் கலந்திருக்காது என்ற கருத்து எழுவது வழக்கம். தமிழ்நாடு சமவெளியில் அமைந் திருப்பதால் அணைகள் கட்ட முடியவில்லை என்று அண்மையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
இந்தக் கூற்று பற்றி பொதுப் பணித் துறை உயர் அதிகாரி ஒரு வர் கூறியதாவது: கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட நதிகள் மற்றும் உபநதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி தக்காண பீடபூமி வழியாக கிழக்கு தொடர்ச்சி மலையைக் கடந்து கடலில் கலக் கின்றன. கேரளா, கர்நாடகா மாநி லங்கள் மேற்கு தொடர்ச்சி மலை யிலும் ஆந்திரா தக்காண பீடபூமி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையி லும் அமைந்துள்ளன. அதனால் அங்கு பள்ளத்தாக்குகள் வழியே ஓடிவரும் நீரைத் தடுத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், அணை கள் கட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
தமிழகம் சமவெளிப்பகுதியாக இருப்பதால் அணைகள் கட்டினா லும் குறைந்த அளவு நீரையே தேக்க இயலும். ஆங்கிலேயர் காலத் திலும் காமராஜர் ஆட்சிக் காலத்தி லும் வாய்ப்புள்ள இடங்களில் அணைகள், தடுப்பணைகள், கத வணைகள் கட்டப்பட்டுவிட்டன. அதன்பிறகு ஒரு டிஎம்சிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட 50 அணைகள் கட்டப்பட்டன.
ஆந்திராவை பொருத்தவரை கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து 434 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள பூண்டி ஏரிக்கு (திருவள் ளூர் மாவட்டம்) கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து நெல்லூர் மாவட்டத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேக்கி வைப் பதற்காக, 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையும் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையும் கட்டப்பட் டது. அங்கிருந்து சென்னை குடி நீருக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் - சோமசீலா அணைக ளுக்கு இடையே கூடுதலாக தண் ணீரைத் தேக்கிவைக்க வெளுகோடு நீர்த்தேக்கம் உட்பட 3 நீர்த்தேக்கங் கள் உள்ளன. மலையில் அமைந் திருப்பதால்தான் இதுபோன்ற ஏற் பாடுகளைச் செய்ய முடிந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு அதுபோன்ற வாய்ப்பு வசதிகள் இல்லாததால், தற்போதுள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி முழு அளவில் பயன்படுத்த வேண்டியது அவசர அவசியம். இவ்வாறு அதிகாரி கூறினார்.
கேரள அரசின் பிடிவாதத்தால் நெய்யாறு அணை, அடவிநயினார் அணை, செண்பகவல்லி அணை, உள்ளார் அணை, அழகர் அணை, ஆலடி அணைத் திட்டங்கள் பயன் பாட்டுக்கு வராமல் உள்ளன. கர்நாடக, ஆந்திர மாநிலங்களின் பாராமுகத்தால் போதிய தண்ணீ ரின்றித் தவிக்கிறது தமிழ்நாடு. இயற்கை கைகொடுத்தால் மட்டுமே குடிநீருக்கும் பாசனத்துக்கும் தண்ணீர் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT