Published : 20 Sep 2018 08:29 AM
Last Updated : 20 Sep 2018 08:29 AM
அதிமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டை கண்டித்து மாநிலம் முழுவதிலும் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 17 மாவட்டங் களில் கூட்டம் குறைவாகக் காணப் பட்டதாகக் கூறப்படுவது குறித்து அக்கட்சித் தலைமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக அரசு மீதான குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வாரியாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில், சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற் றார். சென்னையில் துரைமுருகன், திண்டிவனத்தில் கனிமொழி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்துக்கான ஆர்ப் பாட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந் தது. இதில், மதுரை மாநகர், புற நகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய 3 மாவட்டத்தினர் பங்கேற்றனர். இதேபோல் பல மாவட்டங்களில் கட்சி அமைப்பு ரீதியாக 2 மாவட் டங்களாகச் செயல்பட்டாலும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப் பாட்டத்துக்கு மக்களிடையே வரவேற்பு எப்படி இருந்தது என்பது குறித்து கட்சித் தலைமை முக்கிய நிர்வாகிகள் மூலம் தகவல் திரட்டியது. இதில் 17 மாவட்டங்களில் எதிர்பார்த் ததைவிட கூட்டம் மிகக்குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியது: மு.க.ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு நடக்கும் முதல் போராட்டம் இது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சி நடத்தும் முக்கிய நிகழ்வு. அதிமுக அரசு மீதான ஊழல் குற்றச் சாட்டைக் கண்டித்து நடப்பதால் நல்ல கூட்டம் சேர வேண்டும். இதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட் டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவுகளைப் பிறப்பித்திருந் தது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாவட்ட வாரியாக சேர்ந்த கூட்டம், இதற்குக் கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட தகவல்களை தலைமை சேகரித்தது. திமுக தொழில்நுட்பப் பிரிவு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது.
இதில் மதுரை உட்பட 17 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறை வாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஏற்பாட் டாளர்கள் உள்ளிட்டோரிடம் கட்சி யின் தலைமைக்கழக நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றத்தில் நல்ல கூட்டம் சேர்க்கவே 3 மாவட் டங்களை ஒருங்கிணைந்து நடத்த தலைமை உத்தரவிட்டது. அங்கேயே 1,000 பேரைத் தாண்ட வில்லை. சில வார்டு செயலாளர் கள் உட்பட முக்கிய நிர்வாகி களே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வில்லை. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பங்கேற்பது தெரிந்தும் ஏற்பாட்டா ளர்கள் சுணக்கமாக இருந்துள்ள னர்.
இதுகுறித்து 3 மாவட்டச் செயலாளர்களிடமும் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் விளக்கம் கேட்டு, கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்கப்பட் டுள்ளது. இப்படி ஒவ்வொரு மாவட்டமாக விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாவோர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT