Published : 10 Sep 2018 09:38 AM
Last Updated : 10 Sep 2018 09:38 AM
மாமல்லபுரத்தில் பாரம்பரிய கலை சின்னங்களின் அருகே தொல்லியல் துறை வரையறுத் துள்ள பகுதியில் வரும் நிலங் களின் விவரங்களை, மக்கள் அறிந்து கொள்வதற்காக அவற் றின் சர்வே எண்களை இணை யதளத்தில் பதிவு செய்யும் பணிகளை தொல்லியல்துறை தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய கலை சின்னங்கள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப் படும் பகுதியாக அறிவித்து, தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள், கயி லாச நாதர் கோயில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், உத்திர மேரூர் குடவோலை கல்வெட்டு மண்டபம் ஆகியவை சர்வதேச சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன.
தொல்லியல் துறை பாரம் பரிய சின்னங்களை பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக, கலைச் சின்னம் உள்ள பகுதி யிலிருந்து 100 மீட்டர் தொலை வுக்கு எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதித் துள்ளது. மேலும் 101 மீட்டர் தொலைவிலிருந்து 300 மீட்டர் தொலைவு வரை உள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளது.
இதனால், வரையறை செய் யப்பட்டுள்ள பகுதியில் உள்ள நிலங்களில் கட்டுமான பணி களை மேற்கொள்ள தொல்லி யல் துறையிடம் தடையில்லா சான்று பெறும் நிலை உள் ளது. இதற்காக, நாள்தோறும் ஏராளமான நபர்கள் அலுவல கத்திற்கு நேரில் சென்று வருகின்றனர். இதில், தங்களின் குடியிருப்பு வரையறை பகுதிக் குள் வருகிறதா என தெரி யாமலேயே விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.
எனவே வரையறை செய்யப் பட்ட பகுதிக்குள் தங்களின் குடி யிருப்பு உள்ளதா என ஆன் லைன் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக, வரை யறை பகுதியில் உள்ள நிலங் களின் சர்வே எண் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை, மாமல்லபுரத்தில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தொல்லியல்துறை வரை யறை செய்துள்ள பகுதியில் வரும் நிலங்களின் சர்வே எண் களை, இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் மக்கள் தங்களின் குடியிருப்பு மேற் கண்ட பகுதிக்குள் வருகிறதா, இல்லையா என ஆன்லைன் மூலம் அறிந்துகொள்ள முடி யும். www.nma.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட விவரங்களை அறிந்துகொள்வதற்கான வசதி கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், வரையறை பகுதிக்குள் வந்தால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் ஏற்கெனவே டில்லி, மும்பை, ஆமதாபாத் பகுதிகளில் கலைச் சின்னங்களின் அருகே உள்ள நிலங்களின் சர்வே எண்கள் இணையதளத்தில் பதிவு செய் யப்பட்டுள்ளன. மேற்கண்ட இணைய முகவரியின் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம். தற்போது, காஞ்சிபுரம் மாவட் டத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT