Published : 03 Sep 2018 09:06 AM
Last Updated : 03 Sep 2018 09:06 AM
சென்னை மாநகராட்சியின் 9 மண்டலங்களில் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்த ‘நகர விற்பனை குழு’வை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இக்குழுவுக்கான உறுப்பினர் களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 20-ம் தேதி நடக்கிறது.
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத் துவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு, தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல்) சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதன்படி 2015-ம் ஆண்டு, தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல்) விதிகள் உருவாக்கப்பட்டன.
இந்த விதிகளின்படி, மாநகரம் முழுவதும் தெரு வோர வியாபாரிகளை கணக் கெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் மாநகரம் முழுவதும் 39 ஆயிரம் கடைகள் இருப்பது தெரியவந்தது. அக்கடைக்காரர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 27 ஆயிரத்து 50 பேருக்கு பயோமெட்ரிக் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன.
கடைகளின் எண்ணிக்கையை விட, பயோமெட்ரிக் பதிவு செய் தோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அது தொடர்பாக ஆய்வு செய்தபோது, தெருவோரங்களில் ஒரே நபர், ஒரு கடைக்கு மேல் நடத்தி வந்ததும், சில கடைகளை வாடகைக்கு விட்டதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின் படி, ‘நகர விற்பனை குழு’வை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான தேர்தல் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தெருவோர வியாபாரத்தை முறைப்படுத்த ஒவ்வொரு மண் டலத்துக்கும் ஒரு குழு அமைக் கப்படுகிறது. இதன் தலைவராக மாநகராட்சி மண்டல அலுவலர் இருப்பார். நியமன உறுப்பினர் களாக மண்டல செயற்பொறி யாளர், இரு காவல்துறை அதிகாரி கள் ஆகியோர் இருப்பார்கள். மேலும் தெருவோர வியாபாரிகள் 6 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதில், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், பொது ஆகிய பிரிவுகளில் தலா ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப் படுவர்.
அதற்காக மாநகராட்சியின் 1, 2, 3, 6, 7, 8, 11, 14, 15 ஆகிய 9 மண்டலங்களில் செப்டம்பர் 6-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. 7-ம் தேதி காலை வேட்புமனுக்கள் பரிசீலக் கப்பட்டு, பிற்பகலில் வேட்பாளர் கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 20-ம் தேதி, சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அந்தந்த மண்டல உதவி வருவாய் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படுவர்.
உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்ட பின், ‘நகர விற்பனை குழு’ மூலமாக தெருவோர வியாபாரத்தை முறைப்படுத்து வதற்கான முடிவுகள் எடுக்கப் படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT