Last Updated : 22 Sep, 2018 08:53 AM

 

Published : 22 Sep 2018 08:53 AM
Last Updated : 22 Sep 2018 08:53 AM

பஞ்சாப், கேரள மாநிலங்களைப் போல வெளிநாடுவாழ் தமிழருக்கு உதவ தமிழகத்திலும் தனி துறை: தமிழக அரசுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கோரிக்கை

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு உதவுவதற் காக, பஞ்சாப், கேரள மாநில அரசுகள் போல, தமிழக அரசும் தனி துறையை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிக்காகவும், தொழில், வியா பாரத்துக்காகவும் தமிழர்கள் வெளிநாடு செல்வது நெடுங்கால மாக நடக்கிறது. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ எனும் பழ மொழிக்கு ஏற்ப, தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிந்து பொருள் ஈட்டினர். கடுமையான உழைப்பின் மூலம், பெரும் பொருள் ஈட்டி தாங்கள் வளர்ச்சி அடைந்ததோடு, தங்க ளுக்கு வாழ்வளித்த நாட்டையும், தாய்நாட்டையும் வளர்ச்சி அடையச் செய்தனர்.

வேலைவாய்ப்பு, வர்த் தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக வௌிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து கடந்த 2015-ம் ஆண்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் இருதய ராஜன், டாக்டர் பெர்னார்டு டி சாமி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், 22.26 லட்சம் தமிழர் கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்திருப்பது தெரியவந் துள்ளது. இதில், அதிகபட்சமாக சிங்கப்பூருக்கு 4.1 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, வளை குடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 4 லட்சம் பேர், சவுதி அரேபியாவுக்கு 3.5 லட்சம் பேர், அமெரிக்காவுக்கு 3 லட்சம் பேர், மலேசியாவுக்கு 1.9 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன், குவைத்தில் மொத்தம் 11 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இது வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த தமிழர்களின் எண்ணிக்கையில் பாதி அளவாகும். வளைகுடா நாடுகளில் கேரள மக்களுக்கு (21 லட்சம் பேர்) அடுத்தபடியாக அதிக எண்ணிக் கையில் இருப்பது தமிழர்கள்தான்.

வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக வௌிநாடுகள் மட்டுமின்றி வௌி மாநிலங்களுக்கும் தமிழர்கள் அதிக அளவில் புலம்பெயர்கின்றனர்.

வெளிமாநிலத்துக்கு புலம் பெயர்பவர்கள் என்ற வகையில், மிக அதிக அளவாக 43.1 சதவீதம் தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறி உள்ளனர். அடுத்தபடியாக, ஆந் திராவில் 8.1 சதவீதம், மகாராஷ் டிராவில் 5 சதவீதம் பேர் குடிபெயர்ந்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிச மான அளவுக்கு தமிழர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கேயே நிரந்தர மாக தங்கிவிடுவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

இதை கருத்தில் கொண்ட பஞ்சாப், கேரள மாநில அரசுகள், வௌிநாடுகளில் வசிக்கும் தங்கள் மாநில மக்களுக்கு உதவும் நோக்கில் தனி துறையை ஏற்படுத்தியுள்ளன. அதுபோல, தமிழக அரசும் தனி துறை ஏற்படுத்த வேண்டும் என வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு உறுப்பினர் டாக்டர் ஆறுமுகம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் சுமார் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு காரணங் களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் மூலமாக, கடந்த 2015-ல் தமிழகத்துக்கு ரூ.61,834 கோடி அந்நியச் செலாவணி வருவா யாக கிடைத்துள்ளது. அதேபோல, ஆண்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் பணியாற்றுவ தால், அவர்களது குடும்ப இல்லத் தரசிகளின் பொருளாதார அந் தஸ்து உயர்ந்துள்ளது. சுமார் 26.8 சதவீத பெண்கள் தங்கள் கடன்களை அடைத்துள்ளனர். 21.1 சதவீத பெண்கள் சொந்தமாக வீடு கட்டியுள்ளனர். 13.5 சதவீத பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளித்துள்ளனர். இதுபோல பல வசதிகளை பெற் றுள்ளனர். அந்த பெண்களின் வீட்டுப் பொறுப்பும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், 38.9 சதவீத பெண்கள் பாதுகாப்பு இல்லாத தாக உணர்கின்றனர். 18.9 சதவீத பெண்கள் அச்சத்துடன் வாழ்கின் றனர். 26.2 சதவீத பெண்கள் தங் களது குழந்தைகளின் உடல்நலன் பற்றி கவலைப்படுகின்றனர்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும் இங்கு இருக்கும் குடும் பத்தினருக்கு ஏதேனும் பிரச் சினைகள் ஏற்பட்டால் கவனிப்பதற் காக பஞ்சாப், கேரள மாநில அரசு கள் ஒரு அமைச்சரின் தலைமையில் தனி துறை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் மாநில மக்களுக்கு அங்கு ஏதேனும் கொடுமைகள் நிகழ்ந் தாலோ, வேலைக்கு கூட்டிச் செல் லும் ஏஜென்ட்டுகள் ஏமாற்றி னாலோ, பெண் ஊழியர்களுக்கு பாலியல் கொடுமைகள் நிகழ்ந் தாலோ அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்த துறை வழங்குகிறது. உள்நாட்டிலும் அவர்களது குடும்பத்தினர் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்தால் அதற்கும் இத்துறையின் மூலம் உதவி செய்யப்படுகிறது.

இதேபோல், தமிழக அரசும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர் களுக்கு உதவும் வகையில் தனி துறை ஏற்படுத்தி உதவ வேண்டும். இதன்மூலம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும்.

இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு செல்வதும், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x