Published : 20 Sep 2018 10:04 AM
Last Updated : 20 Sep 2018 10:04 AM
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கோயில்களின் சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அனைத்து விவரங்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 42,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின் சொத்துகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கோயில் சொத்து விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அறநிலையத் துறையிடம் இருந்த தகவலின் அடிப்படையில் சொத்து விவரங் கள் முன்பு இணையத்தில் வெளி யிடப்பட்டன. இருப்பினும் அவை முழுமையான தகவல்களாக இல்லை. ஆவணங்களின் அடிப் படையில் கோயில்களின் சொத்து கள் உறுதி செய்யப்பட்டவுடன் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இதுவரை 35 ஆயிரம் கோயில்களின் நிலம், கடைகள், வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விவரங்கள் கணினி யில் பதிவேற்றம் செய்து முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வருவாய் துறை ஆவணத்துடன் ஒப்பிட்டு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி 35 ஆயிரம் கோயில் களில் முடிந்துள்ளது. மீதமுள்ள கோயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு தீவிரமாக பணியாற்ற அந்தந்த கோயில்களின் ஊழி யர்களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. இந்த பணிகள் முடிந்த வுடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் அனைத் தும் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்துடன் இணைக்கப்படும். வருவாய் துறை ஆவணங்களின் அடிப்படையில் சொத்து விவரங்கள் இணையத்தில் ஒருங்கிணைக்கப்படுவதால் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT