Last Updated : 03 Sep, 2018 09:09 AM

 

Published : 03 Sep 2018 09:09 AM
Last Updated : 03 Sep 2018 09:09 AM

தியாகம், சேவையை இளைய தலைமுறையினர் அறிய வாய்ப்பு வருமா?: மெரினாவில் பராமரிப்பில்லாத தலைவர்களின் சிலைகள் 

பொது இடங்களில் குறிப்பாக மெரினா கடற்கரையில் வைக்கப் பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் பராமரிப்பின்றி பாழாகி வருகின்றன. கல்வெட்டில் உள்ள எழுத்துகள் அழிந்துவிட்டன. சிலை அருகில் தலைவர்கள் வாழ்க்கைக் குறிப்பை எழுதிவைத்தால் அவர்களது தியாகம், சேவையை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நாடு, சமுதாயம், மொழிக்கு தொண்டு செய்த தலைவர்களின் சிலைகள் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட் டுள்ளன. 1968-ம் ஆண்டு சென்னை யில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. இதையொட்டி தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமா முனிவர், அருந்தமிழ் வளர்த்த ஆங்கிலப் புலவர் ஜி.யு.போப், திருவள்ளுவர், பாரதிதாசன் உள் ளிட்டோரின் சிலைகள் மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பாரதியார், கண்ணகி, அவ்வையார், மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோரது சிலைகளும் உழைப்பாளர் சிலை யும் மெரினா கடற்கரையில் நிறுவப் பட்டுள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நூற்றாண்டு கொண்டாட் டத்தையொட்டி அவரது சிலையை 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி மெரினாவில் திறந்துவைத்தார்.

சிலைகளின் பீடத்தில் ஒருபுறம் சிலை திறப்பு விழா தலைவர், திறந்து வைத்தவர், எந்த தேதியில் திறக்கப்பட்டது என்ற விவரங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. மறு புறம் இந்த தகவல் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புறத்தில் சிலையை வழங்கியவரின் பெயரும், வேறொரு புறத்தில் சிலையாக இருப்பவர் தெரிவித்த கருத்தும் இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி அந்த தலைவரின் வாழ்க்கை வரலாறு, அவர் ஆற்றிய தொண்டு பற்றி ஒரு வரிகூட இடம் பெறவில்லை. அதனால் அந்தத் தலைவர்களைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பறவைகளின் எச்சத்தோடு பரிதாபமாக காட்சியளிக்கும் தலைவர்களின் சிலைகள், அவர் களது பிறந்த நாள், நினைவு நாளில் மட்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன்பிறகு யாரும் கண்டு கொள்வதேயில்லை. 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாரதிதாசன், ஜி.யு.போப் ஆகி யோரின் சிலைகளின் பீடத்தில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துகள் அழிந்துவிட்டன.

மெரினாவில் எம்ஜிஆர் நினை விடம் எதிரே சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் கோகுல கிருஷ்ண கோகலேயின் சிலையைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது. மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் (இவரது பிறந்த தினமே ஆசிரியர் தினம்) சிலையும், தமிழ் ஓலைச் சுவடி களை சேகரித்து தமிழ்ச் சமூகத் துக்கு வழங்கிய உ.வே.சுவாமிநாத அய்யரின் சிலையும் பராமரிப் பில்லாததால் மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக இல்லை.

அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை, தினமும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக் கப்படுகிறது. சென்னை பல்லவன் சாலை ஜிம்கானா கிளப் முன்பு 1961-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்ட காமராஜர் சிலையும் நன்கு பராமரிக்கப்படுகிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோதே இச் சிலை திறந்துவைக்கப்பட்டதால் பரபரப்பாக பேசப்பட்டது.

காமராஜர் சிலையின் பக்க வாட்டில் ஒருபுறம் கல்வி, தொழில் துறையில் அவர் ஆற்றிய சாதனை களும், மறுபுறம் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. இதுபோல மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலைகள் அருகிலும் அவர்களின் சாதனை களை கல்வெட்டில் எழுதி வைத்து, சிலைகளை நிறுவியதற்கான நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைய தலைமுறையினர் எதிர்பார்க் கின்றனர்.

இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 150-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. சென்னை மெரினாவில் உள்ள சிலைகளை நாங்கள் பரா மரிக்கிறோம். இதுதவிர தலைவர் களின் நினைவிடம், மணிமண்ட பங்களையும் பராமரிக்கிறோம். மற்ற மாவட்டங்களில் உள்ள சிலை களை உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கின்றன. அரசுக் கல்லூரி கள், பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள சிலைகளை அந்தந்த நிர் வாகமே பராமரிக்கின்றன. மெரினா வில் உள்ள சிலைகளின் அருகே தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, சாதனைகள் விவரம் இடம்பெறவில்லை. அவற்றை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் எழுதி வைப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x