Published : 08 Sep 2018 06:09 PM
Last Updated : 08 Sep 2018 06:09 PM
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேருராட்சிக்கு உட்பட்ட சீபுரம் பகுதியில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் சரோஜினி (72) என்ற பெண்னை காட்டு யானை தாக்கியுள்ளது. இங்குள்ள தனியார் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்த இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் இன்று காலையில் கூடலூரில் தங்கி படிக்கும் தனது பேரனை பார்க்க 6 மணியளவில் பேருந்துக்காக நடந்து வந்தபோது காட்டு யானை தாக்கியுள்ளது.
இவரது சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடி வந்து யானைய விரட்டி மீட்டுள்ளனர். பின் வனத்துறைக்கு தகவல் அளித்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் உயிருக்கு போராடிய நிலையில் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
காயம் அதிகமாக இருந்த நிலையில் அவர் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிக அளவில் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடந்த 3 மாதத்தில் யானை தாக்கி 4 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT