Last Updated : 26 Jun, 2019 09:07 AM

 

Published : 26 Jun 2019 09:07 AM
Last Updated : 26 Jun 2019 09:07 AM

அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அமமுக கொள்கைபரப்புச் செய லாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமமுகவில் தினகரனுக்கு அடுத்த நிலையில் தங்கதமிழ்ச் செல்வன் இருந்தாலும், தேர்தல் தோல்வி காரணமாக மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துவந்தார். நேற்று முன்தினம் வெளியான ஆடி யோவில் தினகரனுக்கு எதிராக அவர் கூறிய கருத்து, கட்சியில் இருந்து அவரை நீக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்விக் குப் பிறகு, தான் முன்வைத்த பல யோசனைகளை தினகரன் புறக் கணித்ததால்தான் கட்சி திசைமாறி செல்கிறது என்று தங்கதமிழ்ச் செல்வன் தனது ஆதங்கத்தை கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தி வந்தார்.

எம்எல்ஏ தகுதி இழப்பு, மக்கள வைத் தேர்தல் தோல்வி, அமமுக தலைமையின் கண்டிப்பு ஆகிய வற்றை தாங்க முடியாமல் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர் களிடம் தனது ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் அவர் தெரி வித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரகசியக் கூட்டங் களை அதிகம் நடத்தி கட்சி நிர்வாகி களுடன் கட்சி மற்றும் தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இது சமூக வலை தளங்களில் பரவி, கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்சினை ஒரே நாளில் வெளியே தெரிய வந்தது.

இதையடுத்து தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் சென்னைக்கு அழைக்கப்பட்டு தினகரன் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் தங்கதமிழ்ச் செல்வனை செய்தியாளர்கள் பலரும் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது இணைப்பு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. இதனால் தங்க தமிழ்ச் செல்வனிடம் கட்சி தரப்பில் இருந்து விளக்கம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கிருக் கிறார் என்பதும் தெரியவில்லை.

இதுகுறித்து அவருக்கு நெருக்க மானவர்கள் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான செயல்பாடு கொண்டவர் என்பதால் அவர் மூலம் அதிமுகவில் இணைய முடியாது. எனவே முதல்வர் பழனி சாமியுடன் இருக்கும் நிர்வாகிகளி டம் தொடர்பு கொண்டு வந்தார்.

பழனிசாமி தரப்பில் இதற்கு சம்மதிக்க முன்வந்தாலும் பன்னீர் செல்வத்திடம் எதிர்ப்பு நிலையே இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் இதற்கு முட்டுக் கட்டை போடுவதாகக் கூறப்படு கிறது. தற்போது பிரச்சினை தீவிர மாக இருப்பதால் சில நாட்கள் கழித்து தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்றனர்.

இருப்பினும் அதிமுக தொண்டர் களிடையே இவர் குறித்து கடுமை யான விமர்சனங்களே இருந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் அமமுகவுக்கு ஓட்டு போடாவிட்டா லும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வந்தார். மேலும் அதிமுக ஆட்சியைக் கலைப்பேன் என்றும் சவால் விட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட்டபோது தனிப்பட்ட விஷயங்களை பிரச்சாரம் செய்தது டன் அவரை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் பகை உணர்வு தொடரும். இது கட்சிக்கு நல்லதல்ல என்றனர்.

“அமமுகவில் இருந்து நீக்கப் பட்டால் ஒரே பாதை அதிமுகவை நோக்கியதாகவே இருக்கும். இப்பிரச்சினையை சில நாட்கள் ஆறப்போட்டுவிட்டு மீண்டும் அதை நோக்கிய பயணமாகவே அவரது அரசியல் இருக்கும்” என்றே தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் கூறி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x