Published : 05 Apr 2014 12:02 PM
Last Updated : 05 Apr 2014 12:02 PM
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டது.
சென்னை ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் புதன்கிழமை மாலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதே சாலையில் செல்போன் கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி என்பவர் கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து செல்ல முடியாமல், மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பரங்கிமலை போலீஸில் ராமமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT