Published : 19 Jun 2019 12:00 AM
Last Updated : 19 Jun 2019 12:00 AM

`டக்..! டக்..! டக்.. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?- ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் நூதன விழிப்புணர்வு

``டக்..! டக்..! டக்..' `நீங்கள் பாதுகாப் பாக இருக்கிறீர் களா?'' என்ற வாசகத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீ ஸார் நூதன பிரச்சாரம் மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடுவது, வீட்டில் தனியாக இருப்பவர்களை தாக்கிக் கொள்ளை யடிப்பது எனப் பல வகைகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றைத் தடுக்க முடியாமல் போலீஸாரும் திண்டாடி வருகின்றனர்.

குற்றங்களைத் தடுக்கப் போலீஸார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட் டத்தில் முக்கியமான இடங்களில் ``டக்..! டக்..! டக்..! நீங்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்களா?" என்ற கேள்வியுடன் கூடிய நூதனமான பிரச்சார அறிவிப்புப் பலகைகளை நிறுவியுள்ளனர்.

இதில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க ஜன்னல், கதவு வலுவானதாக இருக்கும்படி ஏற்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள விலை மதிப்புமிக்க பொருட்களை வங்கிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கவும். உங்கள் வீட்டுக்கு வருவோரை உள்ளிருந்தே கண்ட றியும் வகையில் கதவின் நிலைப்பகுதியில் துளை அமைத்திருப்பதுடன், கதவுக்கும் நிலைக்கும் இடையே சங்கிலி பொருத்தி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தேவையான இடங்களில் சி.சி.டி.வி. கேமரா, பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஆகியவை பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் சுற்றுப்புறம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் வகையில் விளக்கு அமைத்துக் கொள்ள வேண்டும் என 6 விதமான பாதுகாப்பு விழிப் புணர்வு வாசகங்கள் எழுதப்பட் டுள்ளன.

முன்னதாக `ஹலோ போலீஸ்' என்று வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையின் இந்த நூதனப் பிரச்சாரம் பொதுமக்களிடையே வரவேற் பைப் பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x