Published : 12 Jun 2019 09:30 AM
Last Updated : 12 Jun 2019 09:30 AM
காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள மேட் டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது, அதில் 93.47 டிஎம்சி நீர் இருக்கும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி என 12 மாவட் டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதார மாக இருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகு படி மேற்கொள்வதற்கு உதவியாக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பது பொதுப்பணித் துறையின் அட்டவணை.
தொடக்க காலத்தில், கர்நாடகா வில் காவிரியின் துணை நதிகளில் அணை கட்டப்படுவதற்கு முன்னர் வரை மேட்டூர் அணைக்கு போதிய அளவுக்கு நீர் வந்தது. இதனால், ஜூன் 12-ம் தேதிக்கு முன்கூட்டியே மே மாதத்தில் 10 முறை டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. ஆனால், குறைவான பருவமழை, வறட்சி உட்பட பல்வேறு காரணங் களால், 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது முதல் இது வரை 16 முறை மட்டுமே உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்காக நீர் திறக் கப்பட்டது.
நடப்பு பாசன ஆண்டுக்கு இன்று (12-ம் தேதி) நீர் திறக்கப்பட வேண் டிய நிலையில், மேட்டூர் அணையில் 45.59 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் உள்ளது. இதில் ‘டெட் ஸ்டோரேஜ்’ 25 அடி என்பதால், அதற்கும் கீழே உள்ள நீரை பாசனத்துக்கு திறக்க முடியாது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 90 டிஎம்சி நீர் இருப்பு இருந்தால் மட்டுமே, சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும்.
குறிப்பாக, நாளொன்றுக்கு 1 டிஎம்சி என்ற வீதத்திலாவது நீர் திறந்தால்தான் 90 நாட்களுக் காவது தொடர்ந்து பாசனத்துக்கு நீர் வழங்க முடியும். ஆனால், அணையில் 15.14 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனவே, இந்த ஆண்டும் உரிய காலத்தில் நீர் திறக்க முடியாமல் போனது. மேட்டூர் அணையின் 86 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத் தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படா மல்போவது இது 60-வது முறை யாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த ஆண்டுபோல நடப்பாண்டும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கைத் வைத்து காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT